MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Director Hari : தமிழ் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு... மாஸ் ஹீரோ மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குனர் ஹரி

Director Hari : தமிழ் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு... மாஸ் ஹீரோ மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குனர் ஹரி

Director Hari : தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் டைரக்டராக வலம் வரும் இயக்குனர் ஹரி, அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். 

1 Min read
Author : Ganesh A
| Updated : Apr 09 2022, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான ‘தமிழ்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஹரி. விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சாமி திரைப்படம், இயக்குனர் ஹரிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதையடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய சிங்கம் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வெற்றியின் காரணமாக அப்படத்தின் 2 மற்றும் 3-ம் பாகங்களையும் இயக்கி வெற்றி கண்டார் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சாமி ஸ்கொயர். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

34

பின்னர் சூர்யாவை வைத்து அருவா என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார் இயக்குனர் ஹரி. இதனிடையே சூர்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அருவா படத்தை கைவிட்டார். இதையடுத்து அருண்விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த இயக்குனர் ஹரி, அவரை வைத்து யானை என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது.

44

இவ்வாறு தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் டைரக்டராக வலம் வரும் இயக்குனர் ஹரி, அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் டோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் இயக்குனர் ஹரி. ஏற்கனவே இயக்குனர்கள் ஷங்கர், லிங்குசாமி ஆகியோர் அண்மையில் தெலுங்கு படங்களை இயக்க சென்ற நிலையில், தற்போது இயக்குனர் ஹரியும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Allu Arjun : போலீசில் சிக்கிய புஷ்பா... விதிமீறிய அல்லு அர்ஜுனை நடுரோட்டில் நிறுத்தி அபராதம் விதித்த போலீசார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டோலிவுட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Recommended image3
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved