KGF 2 : தியேட்டரில் சக்கைபோடு போடும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்
KGF 2 : வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கே.ஜி.எஃப் 2. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், சரண், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டது.
வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி இப்படம் வெளியான முதல் நாளே ரூ.134 கோடி வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக கே.ஜி.எஃப் 2 படத்தின் இந்தி பதிப்பு மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எஃப் 2 படத்துக்கு போட்டியாக வெளியிடப்பட்ட விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் அப்படத்துக்காக ஒதுக்கப்பட்ட தியேட்டர்களை தற்போது கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தியேட்டர்களில் சக்கைபோடு போட்டு வரும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படம் தியேட்டரில் வெளியாகி 4 வாரங்களுக்கு பின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற மே மாதம் 13-ந் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Navin - Kanmani engagement : சின்னத்திரை காதல் ஜோடி ‘நவீன்-கண்மணி’ நிச்சயதார்த்தம் முடிந்தது- வைரலாகும் photos