kgf 2 வெற்றிக்காக யாஷ் என்ன செய்தார் தெரியுமா?.. ஹார்ட் ஒர்க் செய்யும் நாயகன்
விரைவில் வெளியாகவுள்ள kgf 2 பட நாயகன் யாஷ் தற்போது கோவிலில் கடும் பிரார்த்தனை செய்யும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

KGF 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் கே.ஜி.எஃப் 2.
KGF2
இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் பெரிதும் ஈர்த்தது. இதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.இந்த படம் பல ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
KGF2
‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது. இதையடுத்து முதல் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டியது.
KGF2
கடந்த ஜனவரி 7ஆம் தேதி யாஷ் பிறந்த நாள் பரிசாக வெளியான கே.ஜி.எஃப் 2 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்தது.
KGF2
அதே வேளையில் சிக்கலையும் சந்தித்தது. அந்த காணொளியில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிற்கும் போலீஸ் வாகனத்தை பெரிய துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்துவார். பின்னர் அந்தத் துப்பாக்கியின் சூட்டில் சிகரெட் பற்றவைக்கிறார்
KGF2
இந்த காட்சிகளுக்கு கண்டனம் எழுத்ததோடு, கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை என்பதும் கண்டிக்கத்தக்கதாகும் என்றும் கூறப்பட்டது.
KGF2
சிக்கல் இருந்தாலும் ரசிகர்களின் பேராதரவு கே.ஜி.எஃப் 2 க்கு அமோகமாக உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பீஸ்ட் க்கு போட்டியாக களமிறங்கவுள்ளது. இதற்கான முன்பதிவு அமோகமாக துவங்கி விட்டது.
KGF2
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் விழாவில் நடிகர் யாஷ் கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் கோவிலுக்கு சென்றுள்ள யாஷ் அங்கு பிரார்த்தனை செய்யும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.