MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • KGF-ஐ தாண்டி இத்தனை மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளாரா யாஷ்? 'ராக்கி பாய்'யின் டாப் 10 மூவீஸ்!

KGF-ஐ தாண்டி இத்தனை மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளாரா யாஷ்? 'ராக்கி பாய்'யின் டாப் 10 மூவீஸ்!

டாக்ஸிக் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று இந்திய சினிமாவின் பெரும் சக்தியாக இருக்கிறார். பஸ் டிரைவரின் மகன் இன்று ஒரு 'பான் இந்தியா' ஸ்டாராக உயர்ந்துள்ளார். யாஷின் சூப்பர் ஹிட் படங்கள் இதோ. 

2 Min read
Author : Ganesh A
Published : Jan 08 2026, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
கே.ஜி.எஃப்: சேப்டர் 2 (KGF: Chapter 2 2022)
Image Credit : sun next

கே.ஜி.எஃப்: சேப்டர் 2 (KGF: Chapter 2 - 2022)

யாஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய படம் கே.ஜி.எஃப். கன்னட சினிமாவுக்கு பெரும் வாசலைத் திறந்த படம். இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'ராக்கி பாய்' ஆக யாஷ் நடித்தார்.

210
கே.ஜி.எஃப்: சேப்டர் 1 (KGF: Chapter 1 - 2018)
Image Credit : sun next

கே.ஜி.எஃப்: சேப்டர் 1 (KGF: Chapter 1 - 2018)

கன்னட சினிமாவின் புகழை மாநில எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்ற படம். இந்த படத்தின் மூலம் யாஷ் முதல்முறையாக பான் இந்தியா அளவில் வளர்ந்தார். ஆக்‌ஷன் மற்றும் தாய் சென்டிமென்ட் இந்த படத்தின் சிறப்பம்சமாகும். பாடல்களும் ஹிட்டடித்தன.

Related Articles

Related image1
கேஜிஎஃப் படத்துக்கு முன்பே களவாணி படத்தில் நடித்திருக்கும் யாஷ்... யாராச்சும் நோட் பண்ணீங்களா?
Related image2
KGF-ஐ விட டபுள் மடங்கு மாஸ்... தெறிக்கவிடும் யாஷின் டாக்ஸிக் டீசர் இதோ
310
மொக்கின மனசு (Moggina Manasu - 2008)
Image Credit : sun next

மொக்கின மனசு (Moggina Manasu - 2008)

இது யாஷின் முதல் படமல்ல என்றாலும், ஹீரோவாக அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார். இங்கிருந்துதான் ராதிகா பண்டிட் - யாஷ் ஜோடி நிஜத்திலும் காதலிக்க தொடங்கியது.

410
டிராமா (Drama - 2012)
Image Credit : sun next

டிராமா (Drama - 2012)

யோகராஜ் பட் இயக்கிய டிராமா படத்தில் யாஷின் காமெடி டைமிங் அபாரமாக இருந்தது. வித்தியாசமான கதை, இனிமையான பாடல்கள், யாஷ்-சதீஷ் நீனாசம், ராதிகா பண்டிட், நிதி சுப்பையா காம்போ பாராட்டப்பட்டது.

510
சந்து ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் (Santhu Straight Forward - 2016)
Image Credit : sun next

சந்து ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் (Santhu Straight Forward - 2016)

யாஷ், ராதிகா பண்டிட் ஜோடியின் ‘சந்து ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ படம் வெற்றி பெற்றது. இது ஒரு பக்கா மாஸ், பொழுதுபோக்கு திரைப்படம். இதில் ராதிகா பண்டிட் உடன் யாஷின் கெமிஸ்ட்ரி வேறலெவலில் இருக்கும்.

610
மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி (Mr. and Mrs. Ramachari - 2014)
Image Credit : sun next

மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி (Mr. and Mrs. Ramachari - 2014)

நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட் நடித்த ‘மிஸ்டர் & மிஸ்ஸஸ் ராமாச்சாரி’ சூப்பர் ஹிட் ஆனது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இப்படம் வெளியான பின்னரே இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. டாக்டர் விஷ்ணுவர்தன் ரசிகராக யாஷ் நடித்தார்.

710
கஜகேசரி (Gajakesari - 2014)
Image Credit : sun next

கஜகேசரி (Gajakesari - 2014)

கஜகேசரி படத்தில் யாஷ் யானையுடன் தோன்றினார். வரலாற்று மற்றும் தற்போதைய காலகட்டத்தின் கதையுடன், யானையுடனான பழைய உறவையும் இப்படம் காட்டுகிறது. நடிகை அமூல்யா இப்படத்தின் நாயகி.

810
ராஜா ஹுலி (Raja Huli - 2013)
Image Credit : sun next

ராஜா ஹுலி (Raja Huli - 2013)

மாண்டியா மொழி, கிராமத்து மண் வாசனையுடன் கூடிய ராஜா ஹுலி படத்தின் வசனங்கள் இன்றும் பிரபலம். நண்பர்களுக்கு இடையேயான பிணைப்புடன், காதல் கதை, ஜாதி-கௌரவம் பற்றியது இப்படம். மேக்னா ராஜ் இப்படத்தின் நாயகி.

910
கிராதகா (Kirataka - 2011)
Image Credit : sun next

கிராதகா (Kirataka - 2011)

மாண்டியா மொழியின் அழகை அற்புதமாக வெளிப்படுத்திய யாஷின் படங்களில் கிராதகாவும் ஒன்று. இப்படத்தில் யாஷின் யதார்த்தமான நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இது தமிழில் வெளியான களவாணி படத்தின் ரீமேக் ஆகும்

1010
கூக்ளி (Googly - 2013)
Image Credit : sun next

கூக்ளி (Googly - 2013)

பவன் உடையார் இயக்கிய ‘கூக்ளி’ திரைப்படம் யாஷுக்கு பெரிய லவ்வர் பாய் இமேஜை தந்தது. ஸ்டைலான தோற்றம், யாஷின் மேனரிசம், ஷரத்-ஸ்வாதி காம்பினேஷன் ரசிகர்களை கவர்ந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2: முடிவுக்கு வந்த சிறை வாசம்.! பண்டியன் குடும்பத்தின் உணர்ச்சிகரமான ரீ-என்ட்ரி! தங்கமயிலுக்கு விழுந்த பலத்த அடி!
Recommended image2
Draupathi 2 : 'திரெளபதி 2' புதிய அப்டேட்! ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் 2வது பாடல்
Recommended image3
KGF-ஐ விட டபுள் மடங்கு மாஸ்... தெறிக்கவிடும் யாஷின் டாக்ஸிக் டீசர் இதோ
Related Stories
Recommended image1
கேஜிஎஃப் படத்துக்கு முன்பே களவாணி படத்தில் நடித்திருக்கும் யாஷ்... யாராச்சும் நோட் பண்ணீங்களா?
Recommended image2
KGF-ஐ விட டபுள் மடங்கு மாஸ்... தெறிக்கவிடும் யாஷின் டாக்ஸிக் டீசர் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved