சித்ரா மாதிரியே அவளுக்கும் நடந்திருமோனு பயமா இருக்கு... பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி
sreenidhi : சீரியல் நடிகை நக்ஷத்ராவின் வருங்கால கணவர் நல்லவர் இல்லை எனக்கூறி நடிகை ஸ்ரீநிதி கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரை சீரியலில் அறிமுகமான ஸ்ரீநிதி, தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்புவை காதலிப்பதாக கூறி அவர் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது பிரபல நடிகை குறித்து பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
யாரடி நீ மோகினி சீரியலில் நாயகியாக நடித்தவர் நக்ஷத்ரா. இவரும், அதே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரீநிதியும் நெருங்கிய தோழிகள் ஆவர். நடிகை நக்ஷத்ராவுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், அவரின் வருங்கால கணவர் நல்லவர் இல்லை எனக்கூறி நடிகை ஸ்ரீநிதி கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் பேசியிருப்பதாவது : நக்ஷத்ரா ரொம்ப நல்ல பொண்ணு, அவளுக்கு அப்பா கிடையாது, அம்மா மட்டும் தான். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி தான் இந்த இடத்துக்கு வந்திருக்கா. ஆனா, இப்போ கல்யாண விஷயத்துல ஏமாந்துட்டா. அவளின் நிச்சயதார்த்ததுக்கு சொந்த தங்கச்சிய கூட கூப்பிடல, அவளுடைய வருங்கால கணவர் நல்லவர் இல்ல.
அவரின் குடும்பமே நக்ஷத்ராவை ஏமாற்றுகிறது. நியாயம் கேட்க போனால் என்னையும் அடிக்க வர்றாங்க. அவளோட வாழ்க்கை நல்லா இருக்கனும், விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை அவளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது” என அந்த வீடியோவில் கண்ணீர் விட்டு அழுதபடியே பேசி உள்ளார் ஸ்ரீநிதி. இவ்வளவும் பேசிய அவர் சிறிதி நேரத்திலேயே அந்த வீடியோவை நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சுரேஷை கொலைகாரி ஆக்கிய இயக்குனருடன் இணையும் பிரியங்கா மோகன்... அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?