- Home
- Cinema
- ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை... கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று சிங்கப்பெண்ணாய் மிளிர்ந்த ஹீரோயினகள்
ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை... கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று சிங்கப்பெண்ணாய் மிளிர்ந்த ஹீரோயினகள்
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தின கொண்டாட்டங்கள் தற்போது களைகட்டி உள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கிய ஹீரோயின்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி என்கிற குக்கிராமத்தில் பிறந்த இவர், 1970, 80 களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார். இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாரும் ஸ்ரீதேவி தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து பல்வேறு விருதுகளையும் வென்று குவித்துள்ளார் ஸ்ரீதேவி. மறைந்தாலும், இவர் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.
நயன்தாரா
நடிகை நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், இவரை சினிமாவில் பிரபலமாக்கியது தமிழ் படங்கள் தான். ஐயா படத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்றளவும் ஏறுமுகத்துடனே சென்று கொண்டிருக்கிறது என்றால் அதற்கு இவரது கடின உழைப்பே காரணம். ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த சினிமாவில், ஹீரோயின்களை வைத்து எடுக்கும் படங்களும் ஓடும் என்பதை நிரூபித்து காட்டி, பல ஹீரோயின்களுக்கு ஊந்துகோளாக இருந்த பெருமை நயன்தாராவுக்கு உண்டு. தற்போது ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார் நயன்.
சமந்தா
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை சமந்தா. பல்லாவரத்தில் பள்ளி படிப்பை முடித்த இவர் இன்று பாலிவுட்டில் அதிக மவுசு இருக்கிறது. சினிமாவில் சாதித்த சமந்தாவுக்கு சமீபத்தில் மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கிய நிலையில், தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் சமந்தா, கைநழுவிப் போன படவாய்ப்புகளை மீண்டும் தட்டித்தூக்கி பாலிவுட்டில் கைவசம் 3 படங்களுடன் செம்ம பிஸியாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!
ராஷ்மிகா
கன்னட நடிகையான ராஷ்மிகா, தற்போது நேஷனல் கிரஸ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். குறுகிய காலத்தில் ராஷ்மிகா இந்த உயரத்தை எட்டியுள்ளது அனைத்து முன்னணி நடிகைகளுக்குமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கன்னடத்தில் ஆரம்பமான ராஷ்மிகாவின் பயணம் பின்னர் டோலிவுட், கோலிவுட் என வெற்றி நடைபோட்டு தற்போது பாலிவுட்டில் ராஷ்மிகாவின் ராஜ்ஜியம் தான். அங்கும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்த இவருக்கு ஆரம்பத்தில் அம்மா வேடத்தில் தான் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அம்மா ரோலில் நடித்தால் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என்கிற பார்முலாவை உடைத்தெறிந்த பெருமை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உண்டு. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் அதிகளவிலான Female centric படங்களில் நடித்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகி அங்கும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Womens Day Special : மகளிரின் விருப்பங்கள் என்னென்ன...? அவர்களே சொன்ன கருத்துகள் உங்களுக்காக...!