Samantha - Naga Chaitanya : இதென்ன புது டுவிஸ்டா இருக்கு.. சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர போறாங்களா?
சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் இணைய உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. அவர்களது சமீபத்திய நடவடிக்கைகளும், ஒரு வேளை அப்படி இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.
சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதில் இருந்து மீண்டு சினிமாவில் தங்களுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கியுள்ளனர். விவாகரத்துக்கு பின் இவர்கள் இருவரது சினிமா கெரியரும் சக்சஸ்புல்லாக உள்ளது.
இதுநாள் வரை கோலிவுட் - டோலிவுட்டில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சர்ச்சையான கதாபாத்திரத்தை கூட துணிச்சலோடு தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டார். அதேபோல் நாக சைதன்யாவும், தனது மார்க்கெட்டை விரிவாக்கி பாலிவுட் வரை சென்றுவிட்டார். அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பங்கார்ராஜு என்கிற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இது ஒருபுறம் இருக்க இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. அவர்களது சமீபத்திய நடவடிக்கைகளும், ஒரு வேளை அப்படி இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. சமீபத்தில் பங்கார்ராஜு பட புரமோஷன் போது சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, தனக்கு சிறந்த ஜோடி சமந்தா தான் என கூறினார்.
அதேபோல் நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட விவாகரத்து அறிவிப்பு தொடர்பான அறிக்கையை திடீரென டெலிட் செய்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.