பீஸ்ட் படத்தை ஏன் பார்க்கணும்? டாப் 5 காரணங்கள்!..
நாளை வெளியாகவுள்ள பீஸ்ட் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் ரசிகர்களின் ஆவலை அதிகரித்து வருகிறது. இந்த படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்னும் டாப் 5 ரீசன்ஸை பார்க்கலாம்..

Beast
அதிகப்படியான ஆக்ஷன் :
முன்னதாக விஜய் அநேக ஆக்சன் படங்களில் நடித்துள்ளார்.அதில் துப்பாக்கி, கத்தி, தெறி போன்ற படங்களை கூறலாம். ஏன் மாஸ்டர் கூட அதிரடி நிறைந்ததாகவே இருந்தது. அதிலும் துப்பாக்கி 200 நாட்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. அந்த வரிசையில் பீஸ்ட் ஆக்சன் நிறைந்ததாக இருக்கும் என நெல்சன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அப்போது ஹாலிவுட் கேரக்டர் ஹிட்மேன் ஜான்விக் போன்ற ரோலில் விஜய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜான்விக் படம் ஒரே இலக்கை நோக்கி போகும் முழு ஆக்சன் களமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் நெல்சன். பீஸ்ட் படத்தில் சின்ன ஷாப்பிங் மால் உள்ளே பிணையமாக மாட்டிக்கொண்ட மக்களை காப்பாற்ற தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கும் முழுநீள ஆக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
beast
காமெடி கலந்த ஆக்ஷன் சீன்கள் :
முழுநீள ஆக்ஷன் கதைக்களமாக இருந்த போதிலும் இந்த படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என நெல்சன் பேட்டி மூலம் தெரிகிறது. விஜய் என்றாலே கண்டிப்பாக நகைச்சுவைக்கு இடமிருக்கும். அதோடு இந்த படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் என காமெடி பட்டாளமே உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு....Simbu video: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆட்டோ ஓட்டும் நடிகர் சிம்பு....பரபரப்பான ரசிகர்கள்..வைரல் வீடியோ ..
beast
இதுவரை பார்க்காத கலர்புல் :
டாக்டர் பட கம்போவான அனிரூத், நெல்சன், சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களது கூட்டணியில் உருவான அரபிக் குத்து ரசிகர்களை வேற லெவலில் என்டர்டெயின் செய்தது. ஒரே மாதத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதேபோல விஜய், அனிருத் காம்போவில் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடல் செம கலர்புல்லாக இருந்தது. இந்த பாடல்கள் போலவே படம் முழுக்க மாஸ் பீஜியமுடன் வண்ணமயமாக அமைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
beast
நெல்சனின் கதாநாயகர்கள் :
நெல்சன் இயக்கத்தில் முன்னதாக வந்த கோலமாவு கோகிலா படத்தில் நாயகி நயன்தாரா வேற ஒரு அம்சத்தில் காட்டப்பட்டுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் அந்த படத்தில் மிகவும் அமைதியான த்ரில்லர் நிறைந்த வெகுளி பெண் போல நடித்திருப்பார். அதேபோல டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டரும் வித்தியாசமானது. எப்போதும் கலகலப்பாக தோன்றும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கடைசி வரை சிரிப்பை வெளிக்காட்டாத ரோபோ போல நடித்திருப்பார். இதன் மூலம் நெல்சன் தனது பட நாயகர்களின் முந்தைய வழக்கமான அடையாளங்கள் வெளிப்படாத வண்ணமே கதையை இயக்கியுள்ளார் என தெரிகிறது.. எனவே பீஸ்ட்டில் இதுவரை பார்க்காத விஜயை நாம் காண்பது உறுதி.
Image: Still from the trailer
இக்கட்டான சூழலில் விஜய் :
இளைய தளபதி விஜயின் முந்தைய படங்களான பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் போதுமான வசூலை பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியில் வெற்றி காணவில்லை. இந்த படங்கள் கமர்ஷியலாக இருந்த போதிலும் கதை அம்சம் இல்லை என்றே பலராலும் பேசப்பட்டது. இந்த அவப்பெயரை போக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். எனவே தற்போது விஜயின் புதிய படம் கட்டாயம் சுவாரஸ்ய கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு....Beast: பீஸ்ட் படத்தின் புத்தம் புதிய ப்ரோமோ...விஜய்க்கு முத்தம் கொடுத்த பூஜா ஹெக்டே...வைரல் வீடியோ ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.