Beast: விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், படத்தில் இருந்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், படத்தில் இருந்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. வளர்த்து வரும் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் இன்னும் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் ரீலிஸ்:

இப்படத்திற்காக, டிக்கெட் புக்கிங் ப்ரோமோஷன் வேலைகள் சூடு பிடித்து வருகிறது. இப்படத்தின் முன்பதிவுகள் அனைத்தும் தமிழகமெங்கும் பல இடங்களில் படு வேகமாக நடைபெற்று வருகிறது. எங்கு திரும்பினாலும் தளபதியின் போஸ்டர்கள், பேனர்கள் தான் உள்ளன.
பான் இந்தியா படம்:

பான் இந்தியா படமாக தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படம் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. வருகிற ஏப்ரல் 13-ந் தேதி நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நட்சத்திர பட்டாளங்கள்:

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜ ஹெக்டே தளபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். விஜய்யின் கத்தி, மாஸ்டர், படங்களுக்கு இசையமைத்த அனிருத் இந்த பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என வழக்கம் போல தங்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

படம் சம்பந்தப்பட்ட போஸ்டர், டிரைலர், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் இதுவரை நிறைய வெளியிட்டு விட்டார்கள். இப்போது நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
