Simbu video: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆட்டோ ஓட்டும் நடிகர் சிம்பு....பரபரப்பான ரசிகர்கள்..வைரல் வீடியோ ..

Simbu video: நடிகர் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, ஆட்டோ ஓட்டும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Simbu driving auto video goes viral

நடிகர் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, ஆட்டோ ஓட்டும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. 

கைவசம் உள்ள படங்கள்:

Simbu driving auto video goes viral

அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தப்பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிம்பு:

Simbu driving auto video goes viral

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கும் நடிகர் கமல்ஹாசனே 3 வாரமாக தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் விக்ரம் 2 படப்பணிகளில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகினார்.

Simbu driving auto video goes viral


 இதையடுத்து, அந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.ஒவ்வொரு வார இறுதியிலும் சிம்பு நிகழ்ச்சியை காண ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு இவரின் அணுகு முறை தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றிப் பெற்றார்.

ஆட்டோ ஓட்டும் நடிகர் சிம்பு:

Simbu driving auto video goes viral

இப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆட்டோ ஓட்டும் சிம்புவின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில்  வைரலாகிறது. அதில், அவர் ஆட்டோ ஓட்டுபவர் போல் உடை அணிந்து ஆட்டோவில் உள்ளே இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், அது பார்ப்பதற்கு படம் ஷூட்டிங் போல் தெரிகிறது. இல்லை விளம்பரமா ?என்பது தெரியவில்லை. இது குறித்து தகவல் விரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios