MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 100 கோடி கொடுத்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்... வீடு தேடி வந்த வாய்ப்பு தூக்கியெறிந்த நயன்தாரா..!

100 கோடி கொடுத்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்... வீடு தேடி வந்த வாய்ப்பு தூக்கியெறிந்த நயன்தாரா..!

'டாக்ஸிக்' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா, அதிக சம்பளம் கொடுக்க முன்வந்தும், ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 04 2025, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara controversy
Image Credit : Asianet News

Nayanthara controversy

நடிகர் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்திற்காக தற்போது அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், படம் குறித்து பல ரகசியங்கள் காக்கப்படுகின்றன. கதை, நடிகர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா, முன்பு ஒரு நடிகருடன் 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நயன்தாரா ரிஜெக்ட் பண்ணிய படம்
Image Credit : Instagram

நயன்தாரா ரிஜெக்ட் பண்ணிய படம்

நயன்தாரா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் நடித்துப் புகழ் பெற்றவர். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நயன்தாராவுக்கு பெரும் மவுசு கூடியுள்ளது. 'ஜவான்' படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நயன்தாரா, தற்போது தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டே இருக்கிறார். ஆனால், ஒரு நடிகருடன் மட்டும் 10 அல்ல, 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிய விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.

34
100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்
Image Credit : Instagram

100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்

அந்த நடிகர் வேறு யாருமல்ல, சரவணன் தான். 2022-ல் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியானது. சரவணன் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க சரவணன் பல முயற்சிகள் செய்தார். ஆனால், நயன்தாரா எதற்கும் செவி சாய்க்கவில்லை. 'எனக்கு 10 கோடி அல்ல, 100 கோடி கொடுத்தாலும் வரமாட்டேன்' என்று கூறியிருந்தார். நயன்தாராவுக்குப் பதிலாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, சரவணனுக்கு ஜோடியாக நடித்தார்.

சம்பள விஷயத்தில் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட், நயன்தாராவை விட முன்னணியில் உள்ளனர். தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் 15 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் சரவணன் விஷயத்தில் நயன்தாரா ஏன் அப்படிச் சொன்னார் என்பது குறித்து பெரும் விவாதம் நடந்தது. ஆனால், இதுவரையில் இந்த விஷயம் குறித்து நயன்தாரா பேசவில்லை.

44
பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
Image Credit : Instagram

பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், ஒரு தமிழ் ஊடகத்தில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார். 'நயன்தாரா வீட்டின் முன்பு அடிக்கடி ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். பின்னர் அதே கார் ஒரு திருமணத்தில் காணப்பட்டபோது விஷயம் தெரிந்தது. அது லெஜண்ட் சரவணனின் கார். அவர் தனது படத்தில் நடிக்க நயன்தாராவை தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தார். பலமுறை அவர் வீட்டிற்கும் சென்ற விஷயம் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தனது படத்தில் நயன்தாரா நடிக்க இரட்டிப்பு சம்பளம் தருவதாகவும் கூறி இருக்கிறார். ஆனால் ஏனோ தெரியவில்லை, 100 கோடி கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கறாராகக் கூறிவிட்டார்' என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image2
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image3
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Related Stories
Recommended image1
டோலிவுட்டில் பிசியான நயன்தாரா... சிரஞ்சீவியை தொடர்ந்து 65 வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் நயன்..!
Recommended image2
யாஷ் - நயன்தாரா நடிக்கும் டாக்ஸிக் ரிலீஸ் தள்ளிப்போகுதா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த படக்குழு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved