- Home
- Cinema
- Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Jananayagan Release : இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ஒட்டுமொத்த கோலிவுட்டிலும், சினிமா ரசிகர்களிடமும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தொடர்ந்து தள்ளிப்போகும் ரிலீஸ்
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், மே மாதம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. சென்சார் சான்றிதழ் (தணிக்கைச் சான்றிதழ்) பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இரண்டு முறை விளக்கம் அளித்திருந்தார். அண்மையில், ஜூன் 19-ஆம் தேதி படம் வெளியாகலாம் என்று தகவல்கள் கசிந்ததால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரோடக்ஷன்ஸ் (KVN Productions) சமூக வலைத்தள பக்கங்களில் விஜய் ரசிகர்கள் தவமாய் காத்திருந்தனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் ஜூன் 19 அன்று 'பாலன்' என்ற படம் வெளியாவதாக அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில், குறிப்பாக விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி படம் வெளியாகலாம் என அரசல் புரசலாகப் பேசப்பட்டு வருகிறது.
அதிர்ச்சியூட்டிய ஹெச். வினோத்தின் பதில்
இப்படியானச் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஹெச். வினோத்திடம் 'ஜனநாயகன்' எப்போது ரிலீஸ் ஆகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வினோத், "படம் வரும்போது வரும். அதை என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரிலீஸ் தேதி நம் கையில் இல்லை" என்று கூறினார்.
அத்துடன் நிறுத்தாமல், படம் தாமதமாவது குறித்த பின்னணி உண்மைகளைப் பற்றிப் பேசும்போது, "அந்த உண்மையைச் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. ஒருவேளை அந்த உண்மையைச் சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை அப்படியே போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்ப்போம்" என்று மிகவும் வெளிப்படையாகவும், அதிரடியாகவும் பேசி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வினோத் இப்படிப் பேசும்போது அருகில் இருந்த இயக்குநர் பா. ரஞ்சித் சிரித்தது, இந்த ரிலீஸ் தள்ளிப்போவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் ரஞ்சித்துக்கும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் குமுறல்
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளங்களில் நல்ல பிரிண்ட்டில் கசிந்து (Leak) ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. "மாநில முதல்வரின் படத்திற்கே சென்சார் சான்றிதழ் வாங்க 5 மாதங்கள் ஆகுமா? படத்தைத் தள்ளிப்போட வைப்பது யார் என்பது இப்போது ஓரளவுக்குப் புரிகிறது" என்று சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் தங்களது குமுறல்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

