- Home
- Cinema
- Jananayagan: பாக்ஸ் ஆபிஸில் விழுந்த பெரும் ஓட்டை! 'ஜனநாயகன்' வராததால் தமிழ் சினிமாவிற்கு ரூ.100 கோடி நஷ்டமா?!
Jananayagan: பாக்ஸ் ஆபிஸில் விழுந்த பெரும் ஓட்டை! 'ஜனநாயகன்' வராததால் தமிழ் சினிமாவிற்கு ரூ.100 கோடி நஷ்டமா?!
தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை மற்றும் சட்டப் பிரச்சனைகளால் முடங்கியுள்ளது. இந்த தாமதத்தால் தமிழ் சினிமா வர்த்தகத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

தாறுமாறாக சரிந்த தமிழ் சினிமா பிஸ்னஸ்.!
தமிழ் திரையுலகமும் ரசிகர்கள் பட்டாளமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், தற்போது சட்டப் போராட்டங்களில் சிக்கி் தவித்து வருகிறது. எச். வினோத் இயக்கத்தில், விஜய்யின் அரசியல் வருகைக்கு் பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு இன்றும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால், தற்போது இப்படம் சந்தித்திருக்கும் முட்டுக்கட்டைகள் தயாரிப்பு தரப்பை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே உலுக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.
சென்சார் கொடுத்த கிசகப்பு சிக்னல் - என்ன நடந்தது தெரியுமா?
பொங்கலுக்கு விருந்து படைக்க திரைக்கு வரவேண்டிய ஜனநாயகன் தணிக்கை் குழுவின் பிடியில் யாரும் எதிர்பாராத வகையில் சிக்கியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி படம் வெளியிடுவதற்காகன சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். படக்குழுவினர் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் சென்சார் போர்டு தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்ததால், விவகாரம் நீதிமன்றத்தின் படியில் ஏறியது.
நீதிமன்றப் போர் பதற்றம்! இழுபறியில் தீர்ப்பு
நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஒரு ‘ரோலர் கோஸ்டர்’ பயணம் போலவே நகர்கிறது. முதலில் தனி நீதிபதி 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். மேல்முறையீட்டில் சென்சாருக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தது. வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று, மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கே திரும்பியுள்ளது. தற்போது மீண்டும் ஒரு தனி நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இதனால் படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்குறி நீடிக்கிறது. இதனால் விரக்தியடைந்த தயாரிப்பு நிறுவனமான KVN Productions, வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் சென்சார் அதிகாரிகளிடமே செல்ல முடிவெடுத்துள்ளதாக் தெரிகிறது.
100 கோடி ரூபாய் நஷ்டம்: ரமேஷ் பாலா ஓபன் டாக்!
படம் தள்ளிப்போனது வெறும் ஏமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சரிவு என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார் பிரபல சினிமா டிராக்கர் ரமேஷ் பாலா. அவர் அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.!
பாக்ஸ் ஆபிஸ் இழப்பு
ஜனநாயகன் ரிலீஸாகாததால் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரமேஷ் பாலா கூறியுள்ளார்.
ஜனவரி வசூல் நிலவரம்
கடந்த ஜனவரி மாதம் வெளியான பராசக்தி (55 கோடி) மற்றும் தலைவர் தம்பி தலைமையில் (30 கோடி) ஆகிய படங்கள் இணைந்து மொத்தம் 85 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தன.
ஜனநாயகன் வந்திருந்தால்?
ஒருவேளை இப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகியிருந்தால், தமிழ்நாட்டில் மட்டுமே எளிதாக 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக் குவித்திருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஜனநாயகன் வராதது தமிழ் சினிமா வர்த்தகத்திற்குப் பேரிழப்பு என ரமேஷ் பாலா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் மனநிலை என்ன?
தளபதி விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வலு சேர்க்கும் படமாக இது இருக்கும் என்று நம்பிய ரசிகர்கள், தற்போது கடும் மூட் அவுட்டில் இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஜனநாயகன் ரிலீஸ் குறித்த ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? சென்சார் பிடியிலிருந்து ஜனநாயகன் மீண்டு வருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

