த்ரிஷாவின் திடீர் முடிவு... குழப்பத்தில் ரசிகர்கள்... வெளியானது உண்மை காரணம்....!
தற்போது அவர் கணக்கில் வெறும் 7 போட்டோக்கள் மட்டுமே உள்ளன. ஏன் இப்படி பழைய போட்டோக்களை நீக்கினார் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பிப்போயினர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அதன் பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரே மீண்டும் தனது புதிய போட்டோவுடன் ட்விட்டரில் தரிசனம் கொடுத்தார்.
இன்ஸ்டாக்ராமில் அவரை 2.4 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். ட்விட்டரில் 5.2 மில்லியன் ரசிகர்கர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.
லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் சோசியல் மீடியா மூலமாக விளம்பரம் தேடும் முயற்சிகளில் த்ரிஷா ஈடுபட்டது இல்லை.
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக டான்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டு வந்த த்ரிஷா திடீரென அவற்றை நீக்கிவிட்டார்.
தற்போது அவர் கணக்கில் வெறும் 7 போட்டோக்கள் மட்டுமே உள்ளன. ஏன் இப்படி பழைய போட்டோக்களை நீக்கினார் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பிப்போயினர்.
மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்று கூட சில ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினார்.
ஆனால் அதை மறுத்துள்ள த்ரிஷா தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக பதிவிட உள்ளதாகவும், கணக்கில் இருக்கும் பழைய போட்டோக்களை நீக்க தானே முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.