முன்னணி ஹீரோக்களிடம் இருந்து விலகி இருக்கும் நடிகை பானு ப்ரியா.. இதுதான் காரணமா?
80, 90களின் தென்னிந்திய ஸ்டார் ஹீரோக்கள், ஹீரோயின்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் பானுப்ரியா இந்த சந்திப்பில் கலந்து கொள்வதில்லை.
Bhanupriya
80களில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் பானுப்ரியாவும் ஒருவர். அவர் 1983-ம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
Bhanupriya
திரையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ் தெலுங்கில் மட்டும் சுமார் 155 படங்களில் பானு ப்ரியா நடித்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் உச்ச நடிகையாக மாறினார். சுஹாசினி, ரம்யாகிருஷ்ணன், ராதா, ராதிகா, விஜயசாந்தி, குஷ்பு என ஹீரோயின்கள் ஏறுமுகத்தில் இருந்த நேரத்தில், பானுப்ரியாவும் சிறப்பான படங்களில் நடித்தார்.
Bhanupriya
தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சுமன் என அப்போது உச்சத்தில் இருந்த ஹீரோக்களுடன் அவர் ஜோடி சேர்ந்தார். திருமணமான பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.
Bhanupriya
80, 90களின் தென்னிந்திய ஸ்டார் ஹீரோக்கள், ஹீரோயின்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் பானுப்ரியா இந்த சந்திப்பில் கலந்து கொள்வதில்லை.
Bhanupriya
சிரஞ்சீவி, பாலய்யா, வெங்கடேஷ், ரஜினிகாந்த், மோகன்லால், சுமன், பானுசந்தர், அர்ஜுன் போன்ற நட்சத்திரங்களும், சுஹாசினி, ராதா, ராதிகா, சுமலதா போன்ற ஹீரோயின்களும் கெட் டு கெதர் மீட்டிங்கில் பங்கேற்கின்றனர். ஆனால் பானுப்ரியா ஏன் விலகி இருக்கிறார் என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
Bhanupriya
இந்த நிலையில் பானுப்ரியா ஏன் ரீ யூனியனில் கலந்து கொள்வதில்லை என்பது குறித்து மூத்த ஹீரோ பானுசந்தர் பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ பானுப்ரியாவின் குடும்பத்தில் கடுமையான பிரச்சனைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, பல சர்ச்சைகளில் அவர் சிக்கினார் பானுப்ரியா.
Bhanupriya
அவரின் வீட்டுப் பணிப்பெண்ணுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் அவர் தலைப்பு செய்திககளில் இடம் பிடித்தார். இந்த காரணங்களால் கெட் டு கேதர் போன்ற ரீ யூனியனில் பானுப்ரியா கலந்து கொள்வதில்லை என்று பானுசந்தர் பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் பானுப்ரியா ஒரு பேட்டியில், தன்னை யாரும் ரீ யூனியனுக்கு அழைப்பதில்லை என்று கூறியுள்ளார்.