அமிதாப் பச்சன், சல்மான் கானை முந்திய விஜய்... அதிக வருமான வரி கட்டிய டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ
Top 10 Tax Paying Actor : படத்துக்கு படம் ஒரு நடிகர் பெரும் சம்பளம் உயரும் அதே நேரத்தில், அவர்கள் அரசுக்கு கட்டுகின்ற வரியும் அதிகமாகும்.
Amitabh Bachchan
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பது நம்ம "Big B" தான், அதென்னப்பா "Big B" என்று கேட்டால், அமிதாப் பச்சனை தான் அப்படி செல்லமாக பாலிவுட் ரசிகர்கள் அழைக்கின்றனர். பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஒரு நடிகர், தான் நடித்த முதல் படத்திற்காகவே தேசிய வென்றுள்ளார் என்றால் அது நிச்சயம் அமிதாப் பச்சன் மட்டும் தான். அதுமட்டுமல்ல, அவருடைய இந்த 55 ஆண்டுகால திரை பயணத்தில் முதல் முறையாக இப்பொது தான் அவர் நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் தான் ரஜினியின் வேட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்பொது சம்பளத்துக்கு வருவோம், பொதுவாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரவு வாங்கும் நடிகர் அமிதாப் பச்சன், அண்மையில் அவர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான கல்கி திரைப்படத்தில் நடிக்க அவர் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. நடிப்பை தவிர தயாரிப்பு, நிறுவன நிர்வாகம் என்று பல வகையில் இந்த உயர்ந்த மனிதனுக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொடுக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.
அதே போல இந்திய தேசத்திற்கு இவர் மூலம் கிடைக்கும் வரியும் கணிசமாக அதிகம் என்றே கூறலாம். அண்மையில் பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி அமிதாப் பச்சன் கட்டும் வரியின் அளவு சுமார் 71 கோடியாம். ஆனால் இவரே நான்காவது இடத்தில் தான் இருக்கிறார் என்றால் பார்த்துக்கோங்க.
மாட்டிக்கிட்ட பங்கு... ஒரே பாடல் வரிகளை மாத்தி மாத்தி 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!!
Salman Khan
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பது சல்மான் கான் தான், அண்மையில் கிடைத்த தகவலின்படி, இந்திய திரையுலகிலேயே 58 வயதிலும் சிங்கிளாக இருக்கும் ஒரே நடிகர் இவர் தானாம். ஆனாலும் பாலிவுட் உலகின் காதல் மன்னனும் இவரே. தனது பயணத்தை துணை இயக்குனராக பாலிவுட் உலகில் துவங்கிய சல்மான் கான், எழுத்தாளராகவும் சில படங்களில் பணியாற்றி அதன் பிறகு தான் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கினார்.
கடந்த 36 ஆண்டுகளாக ஹிந்தி மொழியில் டாப் நடிகராக வலம்வரும் நடிகர் சல்மான் கான் பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் இன்றளவும் பாலிவுட் உலகில் டாப் நடிகராக வலம்வருபவர்களில் அவரும் ஒருவர். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு அவர் நடிப்பில் "டைகர்" என்ற படம் வெளியானது. இந்த ஆண்டு எந்த படமும் இதுவரை அவர் நடிப்பில் வெளியாகவில்லை என்றாலும் இப்பொது சிக்கந்தர் என்ற படத்தில் பிசியாக அவர் நடித்து வருகின்றார்.
ஒரு படத்துக்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் பெரும் டாப் நடிகரான சல்மான் கான், அவர் நடிக்கும் விளம்பர படங்களுக்கு சுமார் 6 முதல் 8 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். அதுமட்டுமல்ல சல்மான் கான் வரியாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் கட்டுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.
Shah Ruk Khan
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவரை பார்க்கும் முன் முதலிடத்தில் இருப்பவரை பார்த்துவிடலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நடிகர் ஷாருக்கான் தான். வெளிநாடுகளுக்கு சென்று, நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று கூறினால், பாலிவுட் உலகை சுட்டிக்காட்டி ஷாருக்கானின் ஊரா என்று கேட்பார்களாம். அந்த அளவிற்கு உலக அளவில் பிரபலமான ஒரு நடிகர் ஷாருக்கான்.
இந்திய திரை உலகை பொறுத்தவரை பல கோடிகளில் சம்பளத்தை வாங்குகின்ற வெகு சில நடிகர்களின் இவரும் ஒருவர். சரியாக சொல்லப்போனால் ஷாருக்கான் ஒரு படத்திற்கு, தோராயமாக 150 முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமல்ல அவர் ஒரு விளம்பர படத்தில் நடிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் அதற்காக 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்வாராம். இன்றளவும் நல்ல பல திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் அவர், அண்மையில் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்கின்ற படத்தில் நடித்திருந்தார்.
உலக அளவில் அந்த திரைப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் மட்டுமின்றி தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்களில் ஷாருக்கான் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 92 கோடியை அவர் வரியாக இந்திய அரசுக்கு கட்டி வருவதாக கூறப்படுகிறது.
Thalapathy Vijay
மேலும் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும், முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே தமிழ் நடிகராகவும் திகழ்பவர் தளபதி விஜய் தான். நடிகர் விஜய் வரியாக மட்டும் சுமார் 80 கோடி ரூபாயை கட்டி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் திரை உலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த நடிகராக பயணித்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான "கோட்" திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில தினங்களில் தனது அடுத்த திரைப்பட பணிகளை துவங்கும் அவர், அந்த 69வது திரைப்படத்தோடு தனது கலை உலக பயணத்திற்கு முற்றிலுமாக முடிவு கட்டிவிட்டு, முழு நேர அரசியல் தலைவராக பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வருகின்ற செப்டம்பர் மாத இறுதியில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு சென்னையை அடுத்து விக்கிரவாண்டியில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.