யார் இந்த தயாரிப்பாளர் ஜெயமுருகன் – தயாரித்து, இயக்கிய படங்கள் என்னென்ன?
Director T M Jayamurugan List of Movies : தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது தயாரிப்பில் வந்த படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
Director T M Jayamurugan, Adada Enna Azhagu
Director T M Jayamurugan List of Movies : கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரபலங்களின் மறைவு செய்தி அனவரையும் அதிர்ச்சி அடையச் செய்து வருகிறது. அந்தப் பட்டியலில் இப்போது தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகன் முத்துச்சாமியும் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார் என்ற செய்தி காலை முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டுமே தயாரித்தவர் ஜெயமுருகன்.
Sindhu Bath, Poonguyile, Jayamurugan Produced Movies
முதலில் படங்கள் தயாரிப்பதில் காவனம் செலுத்தி வந்த ஜெயமுருகன் பிறகு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜெயமுருகன் முதலில் தயாரித்த படம் தான் சிந்து பாத். கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கத்தில் மன்சூர் அலி கான் லீடு ரோலில் நடித்து வெளியான படம் தான் சிந்து பாத். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கஸ்தூரி நடித்தார். மேலும், சங்கவி, செந்தில், ஆர் சுந்தர்ராஜன், கோவை சரளா, ஜெய் கணேஷ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
T. M. Jayamurugan Filmography
இந்தப் படத்திற்கு இசை தேவா கொடுத்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், இயக்குனராக களமிறங்கினார். அப்படி இவர் இயக்கிய முதல் படம் தான் ரோஜா மலரே. முரளி, அருண் பாண்டியன், ஆனந்த் பாபு, ரீவா ஆகியோர் பலரது நடிப்பில் 1997-ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது. தயாரிப்பாளராக தோற்றாலும், இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றியை பெற்றார்.
Jayamurugan Muthusamy Movies
இந்தப் படத்தைத் தொடர்ந்து புருஷன் எனக்கு அரசன், தீ இவன், அ டடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கினார். இதில் நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்த தீ இவன் படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. மற்ற படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. மேலும் அடடா என்ன அழகு மற்றும் தீ இவன் படங்களுக்கு டி.எம்.ஜெயமுருகனே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Director T M Jayamurugan Passed Away
தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமையாளராக இருந்த ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வந்த ஜெயமுருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. அவரின் உடல் இன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இவருக்கு தங்களின் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.