'தளபதி 65 ' படத்தில் விஜய்யுடன் ஜோடிபோதுவது யார்? தீயாக பரவும் இரண்டு ஹீரோயின்கள் பெயர்!
தளபதி விஜய், மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிக்க உள்ள 'தளபதி 65 ' ஆவது படத்தில் ஹீரோயின்களாக நடிக்க உள்ளது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது இரண்டு நாயகிகளில் பெயர் கிசுகிசுக்கப்பட்டது வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டரில் வெளியான மாஸ் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தப் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தலைப்பு வைக்கப்படாத இந்த படம் தற்காலிகமாக தளபதி 65 என அழைக்கப்படுகிறது

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை தொடர்ந்து தற்போது ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த லிஸ்டில் ரஷ்மிக்கா மந்தனாவின் பெயரும் இணைந்துள்ளது.

ஆனால் இதுவரை, தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடி போட உள்ள நாயகி குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அதேபோல் சமீபத்தில் விஜய் டி.வி, சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் தளபதி 65 படத்தில் கமிட் செய்யப்பட்டதால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பூவையார் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் நெல்சனுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.