ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்!
மாதம்பட்டி ரங்கராஜை 2வது திருமணம் செய்துகொண்டுள்ள ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Who is Joy Crizildaa?
புகழ்பெற்ற சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறி புயலை கிளப்பி இருப்பவர் தான் ஜாய் கிரிசில்டா. அதுமட்டுமின்றி தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் இந்த திருமணம் தொடர்பாக வாய் திறக்காமல் சைலண்டாகவே இருந்து வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த நிலையில் இணையத்தில் அதிகம் தேடப்படுவது யார் இந்த ஜாய் கிரிசில்டா என்பது தான். இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர். விஜய்யின் ஜில்லா, ரவி மோகனின் மிருதன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் ஜாய்.
ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார்?
ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அவர் ஜே ஜே ப்ரெட்ரிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட ஜாய் கிரிசில்டாவுக்கும் அவரது கணவர் ப்ரெட்ரிக்கிற்கும் திருமணமான ஐந்து ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2023-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஜே ஜே ப்ரெட்ரிக் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் லாக்டவுன் சமயத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தை இயக்க கமிட் ஆனார் ப்ரெட்ரிக். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன்பின்னர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே அப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் காதல்
விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் ஸ்டைலிஷ்டாக பணியாற்ற தொடங்கிய ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பர்சனல் ஸ்டைலிஷ்டாக பணியாற்றி வந்தார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் அணிந்து வரும் வித்தியாசமான ஆடைகளையெல்லாம் வடிவமைத்தது ஜாய் தான். ஸ்டைலிஷ்டாக பணியாற்றி வந்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட ஜாய், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தாங்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்தார். இதையடுத்து தற்போது தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி அவரின் குழந்தை தன்னுடைய வயிற்றில் உள்ளதாக கூறி ஜாய் கிரிசில்டா ஒருபுறம் பரபரப்பை கிளப்பி இருக்க, மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பயோவில், தான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அவர் விரைவில் விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.