MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதிக்கே தளபதியாக இருப்பவர்! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்... விஜய்யுடன் நெருக்கமானது எப்படி?

தளபதிக்கே தளபதியாக இருப்பவர்! யார் இந்த புஸ்ஸி ஆனந்த்... விஜய்யுடன் நெருக்கமானது எப்படி?

விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யுடன் நெருக்கமானது எப்படி என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 14 2023, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

புதுச்சேரியை சேர்ந்தவர் புஸ்ஸி ஆனந்த். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் புதுவை மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான அஷ்ரப்பிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அதேபோல் அங்கு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆனந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அங்குள்ள புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டார் ஆனந்த்.

24
bussy anand

bussy anand

புஸ்ஸி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனதன் காரணமாக அவருக்கு புஸ்ஸி ஆனந்த் என அனைவராலும் அழைக்கப்பட்டார். அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த புஸ்ஸி ஆனந்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக தான் செய்த நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறியதும், அவர் புஸ்ஸி ஆனந்தை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... மிஸ் யூ Daddy.. So எனக்கும் சேர்த்து ஒரு கேக் பீஸ் சாப்பிடுங்க - ஆசையோடு அப்பாவுக்கு வாழ்த்து சொன்ன வரலக்ஷ்மி!

34
bussy anand

bussy anand

பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த தொடங்கியதை அடுத்து விஜய்யுடனும் நெருக்கமாகிவிட்டாராம். ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியதை பார்த்து கடுப்பான விஜய், அவர்களையெல்லாம் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்குமாறு சொல்ல, புஸ்ஸி ஆனந்தும் அதை செய்திருக்கிறார். இதுவே விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது.

44
bussy anand

bussy anand

அரசியலில் அனுபவமுள்ள புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி வார்டுகள் தோறும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த சொல்லினாராம் விஜய். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் செய்த தீவிரமான களப்பணியைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி வாகை சூடி விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து தான் விஜய்க்கு அரசியல் ஆர்வம் வந்தது. தற்போது விஜய்யை அரசியலில் களமிறக்குவதற்கான அனைத்து வேலைகளையும் முன் நின்று செய்து வருவதும் புஸ்ஸி ஆனந்த் தான். அவரைப் போலவே அரசியலில் விஜய்யை ஜெயிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Maveeran Review : பேண்டஸி கதைக்கு செட் ஆனாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படத்தின் முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Recommended image2
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image3
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved