MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே வரிகளை 2 பாடல்களில் பயன்படுத்திய நா.முத்துக்குமார்... இரண்டுமே வேறலெவல் ஹிட் - அது என்ன பாடல்கள்?

ஒரே வரிகளை 2 பாடல்களில் பயன்படுத்திய நா.முத்துக்குமார்... இரண்டுமே வேறலெவல் ஹிட் - அது என்ன பாடல்கள்?

பாடலாசிரியர் நா முத்துக்குமார் ஒரே பாடல் வரிகளை இரண்டு வெவ்வேறு படங்களின் பாடல்களுக்கு பயன்படுத்தியது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 23 2024, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Na Muthukumar used same Lyrics for 2 Songs

Na Muthukumar used same Lyrics for 2 Songs

பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு தன் பாடல்களில் உவமைகளை பயன்படுத்தி எழுதுவது மிகவும் பிடிக்கும். அவர் ஒரே மாதிரியான உவமைகளை தன்னுடைய வேறு வேறு பட பாடல்களில் பயன்படுத்தி இருக்கும் ஒரு ஆச்சர்ய தகவலை தான் தற்போது பார்க்க உள்ளோம். அந்த இரண்டு பாடல்களுமே வேறலெவல் ஹிட் அடித்த மெலடி பாடல்களாகும், ஒரே மாதிரியான சூழல் இருந்ததால் அந்த வரிகளை நா முத்துக்குமார் 2 பட பாடல்களிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

24
Na Muthukumar

Na Muthukumar

அந்த இரண்டு படங்கள் வேறெதுவுமில்லை, கடந்த 2007-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்த கல்லூரி மற்றும் கடந்த 2011-ம் ஆண்டு சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடித்திருந்த எங்கேயும் எப்போதும் ஆகிய இரண்டு படங்கள் தான். அதில் கல்லூரி படத்தில் வரும் சரியா இது தவறா பாடலிலும், எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலிலும் தான் ஒரே வரிகளை பயன்படுத்தி இருப்பார் நா முத்துக்குமார்.

இதையும் படியுங்கள்... ‘ஐயரு பொண்ணு மீன்வாங்க வந்தா’ நா முத்துக்குமார் எழுதிய இந்த பாடல் வரியில் இப்படி ஒரு லவ் ஸ்டோரி ஒளிஞ்சிருக்கா!

34
Kalloori Movie Song

Kalloori Movie Song

கல்லூரி படத்தில் தான் முதன்முதலில் அந்த பாடல் வரிகளை பயன்படுத்தி இருந்தார். அதில் சரியா இது தவறா பாடலில், ‘ஆண்கள் இதயம் படைப்பித்த கடவுள் மெழுகினிலே அதை படைத்துவிட்டான். பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது மெது மெதுவாய் அதை உருக வைத்தான்’ என எழுதி இருப்பார். இதே வரிகளை தான் எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலில் அதே உவமையோடு பயன்படுத்தி இருப்பார்.

44
Engeyum eppodhum Movie Song

Engeyum eppodhum Movie Song

சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலில், ‘அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சய் மெழுகில் செய்தானடி, அது ஒவ்வொரு நொடியும் பெண்ணைக் கண்டால் உருகிட வைத்தானடி’ என எழுதி இருப்பார். இந்த இரண்டு பாடல்களிலும் மெழுகை ஆண்களின் இதயத்தோடு ஒப்பிட்டு அது பெண்களால் உருகுகிறது என்கிற அழகான உவமையை பயன்படுத்தி இருப்பார் நா.முத்துக்குமார். இந்த இரு பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் 3 இந்த ஹீரோவோடது தான்! ஷாருக்கான், ரஜினி இல்ல!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நா. முத்துக்குமார்
தமிழ் சினிமா
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image2
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Recommended image3
ஆரோக்கியமான போட்டி.. ஆச்சரியமான ஹிட்! எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலில் உருவான காவியங்கள்.. திரையுலகின் பொற்கால ரகசியங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved