MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நீலோத்தி என்றால் என்ன? சிறை பட பாடலின் பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரியுமா?

நீலோத்தி என்றால் என்ன? சிறை பட பாடலின் பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரியுமா?

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற சிறை படத்தில் இடம்பெற்ற நீலோத்தி என்கிற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் வரிகள் உருவான விதத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 07 2026, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Secret Behind Neelothi Song
Image Credit : youtube

Secret Behind Neelothi Song

சிறை படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்ததோ, அதில் இடம்பெற்ற நீலோத்தி என்கிற பாடலும் பலரின் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது. நீலோத்தி என்பதே பலரும் கேள்விப்படாத ஒரு வார்த்தையாக இருக்கிறது. இந்த உலகில் பெருவாரியான நிலப்பரப்பை கடல் தான் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நீலம் தான் உலகில் அதிகம் இருக்கிறது என்பதை குறிப்பிடும் வகையில் கவிஞர் சாரதி, நீலோத்தி என்கிற வார்த்தையை அதனை குற்றிப்பிடும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

24
நீலோத்திக்கு அர்த்தம் என்ன?
Image Credit : 7_screenstudio Instagram

நீலோத்திக்கு அர்த்தம் என்ன?

கவிஞரின் கற்பனைப் படி, எனக்கு மன நிம்மதி கொடுக்ககூடிய, எனக்கு ரொம்பவும் பிடிச்ச, என்னோட உலகத்துல பாதிக்கும் மேல இருக்குற நீ தான் என நாயகன், நாயகியை பார்த்து குறிப்பிடும் விதமாக தான் இந்த நீலோத்தி என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் சாரதி. இந்தப் பாடலின் அடுத்த வரியிலேயே ‘மூஸாவ தேடி ஈசன் கிட்ட தூவாவம் செஞ்சி வணங்குவேன்’ என எழுதி இருப்பார். மூஸா என்பது இஸ்லாமிய இறைத் தூதரைக் குறிக்கும். என்னோட சாமியை தேடி ஈசன் கிட்ட துவாவம் செஞ்சி வணங்குனேன் என இஸ்லாம், இந்து என இரு மதத்தையும் ஒருங்கிணைத்து எழுதி இருக்கிறார்.

Related Articles

Related image1
SIRAI: யாரும் எதிர்பார்க்கல… ஆனா பாக்ஸ் ஆபிஸை குலுக்கிய ‘சிறை’! ஹீரோயிசம் இல்லாமலே ஹிட்!
Related image2
விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு!
34
நீலோத்தி பாடல் ரகசியம்
Image Credit : X

நீலோத்தி பாடல் ரகசியம்

சிறை படத்தின் நாயகன் ஒரு இஸ்லாமியர், நாயகி ஒரு இந்து. அவர்களின் காதலை இதைவிட ஒரு அழகிய வரிகளில் சொல்லியிருக்க முடியாது. அதற்கு அடுத்த வரியில், ‘இருட்டறையில தான் இருந்தவன் வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ’ என எழுதி இருப்பார். முமின் என்றால் அரபிக் மொழியில், நம்பிக்கை உடையவர் எனப் பொருள். சிறையில் இருட்டறையில் இருந்த எனக்கு வெளிச்சமாக ஒரு நம்பிக்கையாக இருந்தவ நீ தான் என்பதை இந்த வரிகளில் அழகாக சொல்லி இருக்கிறார்.

44
சிறை பட பாடல் உருவான விதம்
Image Credit : X

சிறை பட பாடல் உருவான விதம்

இதன்பின்னர் நாயகி, நாயகனை பார்த்து பாடும்படி ஒரு வரி இருக்கும். ‘நேந்துக்கிட்ட சாமிகிட்ட எஞ்சாமிய பாத்துக்க’ என்கிற வரிகளில் நாயகி, நாயகனை தான் கடவுள் போல் பார்ப்பதாவவும், அந்த கடவுளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாரு சாமிகிட்ட வேண்டிக்கிட்டதாக சொல்லி இருக்கிறார். அடுத்த வரியிலேயே ‘படச்சசாமி கேட்காததையும் படிச்ச சாமி கேக்குதே’ என எழுதி இருப்பார். தன்னோட குறைகளை படைச்ச சாமி கூட கேட்கவில்லை. ஆனால் படிச்ச சாமி கேட்டுச்சு என போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பிரபுவை குறிப்பிட்டு மிக அழகாக எழுதி இருந்தார் சாரதி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ்ப் பாடல்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Oscar Awards 2026 : 98வது ஆஸ்கர் விழா! விருதுகளை வாரிசுருட்டியது யார்; யார்? முழு வின்னர் லிஸ்ட் இதோ
Recommended image2
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Recommended image3
காதல் தோல்வியால் உடைந்து நின்ற அர்ஜுன் தாஸ்? மிரட்டும் குரலுக்குப் பின்னால் இத்தனை சோகமா? வைரலாகும் உருக்கமான தகவல்!
Related Stories
Recommended image1
SIRAI: யாரும் எதிர்பார்க்கல… ஆனா பாக்ஸ் ஆபிஸை குலுக்கிய ‘சிறை’! ஹீரோயிசம் இல்லாமலே ஹிட்!
Recommended image2
விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved