MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு இதெல்லாம் தேவையா? உருவகேலி செய்தவனுக்கு செருப்படி பதில் கொடுத்த VJ பார்வதி

கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு இதெல்லாம் தேவையா? உருவகேலி செய்தவனுக்கு செருப்படி பதில் கொடுத்த VJ பார்வதி

இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டு இருந்த பார்வதியை பார்ப்பதற்கு கர்ப்பமான பன்னி மாதிரி இருப்பதாக விமர்சித்த நெட்டிசனுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 13 2022, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி, தனியார் யூடியூப் சேனலில் விஜே-வாக பணியாற்றி வரும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் பிடித்துப்போனதால், குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்தார் பார்வதி. இதன் எதிரொலியாக இவரை கடந்த ஆண்டு நடந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அழைத்தனர்.

25

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் சில நாட்களே இருந்தாலும், அதில் கண்டெண்டுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார் பார்வதி. சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின்னர் இந்த ஆண்டு நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என அவரே திட்டவட்டமாக கூறியிருந்தார்.

35

இப்படி பிரபலமாக இருப்பவர்களுக்கு சில பிராப்லங்களும் இருக்கும். அந்த வகையில் விஜே பார்வதியை இன்ஸ்டாகிராமில் கேலி செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சைலண்டாக இருக்காமல் துணிச்சலுடன் திருப்பி பதிலடி கொடுப்பது தான் பார்வதியின் ஸ்பெஷல். அந்த வகையில் தற்போது தன்னை உருவகேலி செய்தவனை வெளுத்து வாங்கி உள்ளார் பார்வதி.

இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப் தந்த மவுசு... தனுஷுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன படக்குழு

45

பார்வதி இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர், கொடுமைடா சாமி, நல்லா ஃபிட்டா இருந்து ஸ்டேட்டஸ் போட்டா ஓகே, ஆனா இப்படி கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு.. முடியல” என மோசமாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு தரமான பதிலடியும் கொடுத்துள்ளார் பார்வதி.

55

அந்த கமெண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள பாரு, என் தொப்பையை பற்றிய இது போன்ற கமெண்ட்களும், கருத்துகளும் எதிர்பார்த்த ஒன்று தான். ஏன் பெண்கள் சரியான ஷேப்பை கொண்டிருக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். அழகின் தரத்தை தீர்மானிப்பதற்கு நீ யார்? இப்படி கமெண்ட் செய்பவர் சூப்பர் ஃபிட் ஆக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள பார்வதி, நான் தொடர்ந்து தொப்பையுடன் பதிவுகளை போடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும், வைத்திருக்காததும் என்னுடைய விருப்பம். தொப்பையுடன் இருப்பதும், அதோடு புகைப்படத்தை பதிவிடுவதும் சாதாரண விஷயம். நீ சந்தோஷமாக இருப்பதற்காகலாம் என்னால எதையும் பதிவிட முடியாது. இது என்னுடைய உடம்பு என்னுடைய அக்கவுண்ட், என்னுடைய விருப்பம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... வாவ்...சீரியல் நடிகை நீலிமாவின் குழந்தைகளா இது? செம்ம கியூட்... அசர வைக்கும் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜே பார்வதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Recommended image2
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Recommended image3
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved