புது வீட்டில் முதல் ரம்ஜான்; ஹாப்பியாக கொண்டாடிய ஹுசைன் - மணிமேகலை ஜோடி!
தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய காதல் கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து தங்கள் புது வீட்டில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

Hussain Manimegalai Ramadan Celebration : சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அப்போதிலிருந்தே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து மெல்ல மெல்ல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிய மணிமேகலை கடந்த 2017-ம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
மதம்மாறி திருமணம்
ஹுசைன் இஸ்லாமியர், மணிமேகலை இந்து என்பதால் இருவரும் மதம்மாறி திருமணம் செய்துகொள்வதை இருவரது வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு ஓடி வந்த இருவரும் நண்பர்கள் உதவியோடு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இருவரும் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டனர். பின்னர் மணிமேகலை விஜய் டிவிக்கு சென்ற பின்னர் அங்கு அவருக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் கிடைத்ததால் மளமளவென முன்னேறினார்.
காதல் கதை
ஹுசைனை மணிமேகலை காதலித்ததே ஒரு விசித்திரமான கதை. வழக்கமாக சினிமாவில் ஒரு பாடலை பார்த்தால் அதில் ஆடும் ஹீரோவுக்காகவோ அல்லது ஹீரோயினுக்காகவோ பார்ப்பார்கள். ஆனால் மணிமேகலைக்கு ஹீரோவுக்கு அருகில் ஆடும் டான்சர் மீது ஈர்ப்பு வந்துள்ளது. அவர் தான் ஹுசைன். டான்சரான ஹுசைன், ராகவா லாரன்ஸ் உடன் மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் இடம்பெறும் ஆடலுடன் பாடலைக் கேட்டு என்கிற ரீமிக்ஸ் பாடலில் நடனமாடி இருப்பார். அவரின் நடனத்தை பார்த்து இம்பிரஸ் ஆன மணிமேகலை, யார்ரா இந்த பையன் என தேடி கண்டுபிடித்து அவரிடம் தன் காதலை சொல்லி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... VJ Manimegalai: கொட்டும் பணம்; சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை! இத்தனை கோடியா?
புது வீடு கட்டிய மணிமேகலை
ஹுசைனும் மணிமேகலையின் காதலை ஏற்ற பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடி தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர். அதன் மூலமும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வரும் இவர்கள் ஆரம்பத்தில் வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு வாங்கி அண்மையில் குடியேறினர். இதுதவிர இவர்களுக்கு சொந்தமாக பண்ணைவீடு ஒன்றும் உள்ளது.
மணிமேகலையின் ரம்ஜான் கொண்டாட்டம்
ஹுசைனை திருமணம் செய்த பின்னர் ரம்ஜான் பண்டிகையை தவறாமல் கொண்டாடி வரும் மணிமேகலைக்கு இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை சற்று ஸ்பெஷலானதாம். ஏனெனில் அவர்கள் புது வீட்டில் குடியேறிய பின் கொண்டாடும் முதல் ரம்ஜான் பண்டிகை இது என்பதால், இதற்காக ஸ்பெஷல் போட்டோஷூட் ஒன்றையும் இருவரும் நடத்தி உள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு குட் பை; அதிரடியாக புதிய சேனலுக்கு தாவிய தொகுப்பாளினி மணிமேகலை!