பாண்டியன் ஸ்டோர் சித்ராவை கட்டி பிடித்து படு ரொமான்ஸ் செய்த வருங்கால கணவர்..! வைரலாகும் புகைப்படம்..!
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காதலுடன் வருங்கால இளம் தம்பதி புன்னகைத்துக்குக் கொள்ளும் அந்த போட்டோ லைக்குகளை அள்ளுகிறது.
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தின் கதையை அழகாக சொல்லும் இந்த சீரியல், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முல்லைக்கு என இல்லத்தரசிகள் பலரும் ஆர்மியே ஆரம்பிக்கும் அளவிற்கு ஃபேனாக மாறிவிட்டார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு முதன் முறையாக அவருடைய வருங்கால கணவர் அமர்ந்திருக்கும் சித்ராவை கட்டி பிடிப்பது போலவும், சித்ரா வெக்கத்தில் சிரிப்பது போலவும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ..