MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Theatre and OTT Releases : சுதந்திர தின ஸ்பெஷலாக தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?

Theatre and OTT Releases : சுதந்திர தின ஸ்பெஷலாக தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?

Independence Day Special Theatre and OTT Releases : 2026ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் விஷாலின் மகுடம் ஆகிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன.

4 Min read
Author : Ganesh A
Published : Aug 11 2026, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : X

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்

சுதந்திர தின ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டரில் இரண்டு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு திரைப்படம் மகுடம். இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். இதில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இப்படத்தையும் அவரே இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள இந்த இரண்டு படங்களுக்குமே ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thriller Movie: வெறும் 2 மணி நேரம் தான்.. நிமிஷத்துக்கு நிமிஷம் ட்விஸ்ட்! இந்த மலையாள த்ரில்லர் மிஸ் பண்ணாதீங்க

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு பல்வேறு புதிய படங்கள், வெப் சீரிஸ்கள், டாக்குமென்டரிகள் மற்றும் காமெடி ஸ்பெஷல்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கிருத்தி சனோன் நடித்துள்ள காக்டெய்ல் 2, மலையாள ஆக்‌ஷன் த்ரில்லரான காட்டாளன், கங்கனா ரனாவத் நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா உள்ளிட்ட படைப்புகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் மிட்விண்டர் பிரேக் படத்தில் லெஸ்லி மான்வில்லே மற்றும் சியாரன் ஹிண்ட்ஸ் நடித்துள்ளனர். ஓய்வுபெற்ற தம்பதியினர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, தங்களது வாழ்க்கையையும் உறவையும் மீண்டும் புரிந்துகொள்ளும் அனுபவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 11-ம் தேதி ரோரி ஸ்கோவெல்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் என்ற காமெடி ஸ்பெஷல் வெளியாகிறது. இதில் ரோரி ஸ்கோவெல் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பைபிள் சம்பவங்கள், குடும்பம் மற்றும் தனது தந்தையின் கடைசி ஆசை உள்ளிட்ட பல விஷயங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.

அதே ஆகஸ்ட் 11-ம் தேதி உலகப் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மொரின்ஹோவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட மூன்று பாக டாக்குமென்டரியான மொரின்ஹோ வெளியாகிறது. அவரது விளையாட்டு பயணம் மற்றும் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை பதிவு செய்யும் இந்த தொடரில் ஜ்லாட்டன் இப்ராஹிமோவிச், ஃபிராங்க் லேம்பார்ட் உள்ளிட்ட கால்பந்து பிரபலங்களும் இடம்பெறுகின்றனர். இதுவும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

Related Articles

Related image1
Jio OTT Plans: ஜியோ யூசர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.550-க்கு 15+ ஓடிடி ஆப்ஸ், அன்லிமிடெட் 5G!
Related image2
Jio Home: மாதம் ரூ.400 ரூபாய்க்கு வைஃபை, 1000+ டிவி சேனல்கள், ஓடிடி.. அசத்தும் ஜியோவின் புதிய ஹோம் பேக்
35
ஓடிடி ஸ்பெஷல்
Image Credit : Asianet News

ஓடிடி ஸ்பெஷல்

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் நாண்டோ பிட்வீன் டூ வேர்ல்ட்ஸ் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. முன்னாள் குற்றவாளியின் மகள் காணாமல் போன நிலையில், அவளை கண்டுபிடித்து தனது குடும்பத்தை பாதுகாக்க அவர் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் முக்கியக் கதை.

நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 13-ம் தேதி ஏ சைல்ட் ஆஃப் மை ஓன் என்ற டாக்குமென்டரி வெளியாகிறது. 2009-ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படைப்பு, கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடும் ஒரு பெண் எதிர்பாராத வகையில் ஒரு குற்றச் சம்பவத்தில் சிக்கிக்கொள்ளும் பின்னணியை விவரிக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் அதே ஆகஸ்ட் 13-ம் தேதி மை பிரில்லியன்ட் கெரியர் என்ற ஆறு பாக சீரிஸும் வெளியாகிறது. எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் சிபில்லா என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தத் தொடரில் பிலிப்பா நார்த்ஈஸ்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 14-ம் தேதி மோரியா என்ற ஸ்பானிஷ் சீரிஸ் வெளியாகிறது. அர்ஜென்டினாவின் பாப் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய மோரியா காசனின் எட்டு தசாப்த வாழ்க்கைப் பயணத்தை இந்தத் தொடர் பதிவு செய்கிறது.

45
ஓடிடியில் இந்த வாரம்
Image Credit : Asianet News

ஓடிடியில் இந்த வாரம்

மனோரமா மேக்ஸ் ஓடிடியில் மலையாள சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் காட்டாளன் திரைப்படமும் ஆகஸ்ட் 13-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. ஆண்டனி வர்கீஸ், சுனில் வர்மா, துஷாரா விஜயன், ஜெகதீஷ், கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், யானைத் தந்தம் கடத்தலின் பின்னணியில் இருக்கும் கொடூரமான குற்ற உலகத்தை மையமாகக் கொண்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் மை பெஸ்ட் பிரெண்ட், ஹிஸ் கேர்ள்ஃப்ரெண்ட் அண்ட் மீ படத்தில் ஒல்லி மற்றும் மாட்ஜே என்ற நண்பர்களின் வாழ்க்கைக்குள் ரெபெக்கா என்ற பெண் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களே கதையாக அமைந்துள்ளன. நட்பு மற்றும் உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது.

அதே நாளில் தென்னாப்பிரிக்க க்ரைம் டிராமாவான உம்டெட்டோ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. அரசு வழக்கறிஞரான மபாலி தனது சகோதரன் காணாமல் போனதைத் தொடர்ந்து தேடலில் இறங்குகிறார். அப்போது அவர் தனது சகோதரன் ஒரு கொடூரமான குற்றக் கும்பலின் தலைவன் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை அறிந்துகொள்கிறார்.

நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 14-ம் தேதி டோன்ட் சே குட் லக் திரைப்படமும் வெளியாகிறது. சன்னி சாண்ட்லர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், பள்ளி இசை நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரத்தைப் பெறும் சோஃபி எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகளே கதையின் மையமாக உள்ளன.

55
ஓடிடி ரிலீஸ்
Image Credit : Asianet News

ஓடிடி ரிலீஸ்

இந்த வாரத்தின் முக்கிய ஓடிடி ரிலீஸ்களில் ஒன்றான ‘காக்டெய்ல் 2’ ஆகஸ்ட் 14-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஷாஹித் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் கிருத்தி சனோன் நடித்துள்ள இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ஓடிடி ரசிகர்களை சந்திக்கிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி 108 பேஸ் ஹாஸ்பிட்டல் - உரி என்ற புதிய சீரிஸ் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. எரிகா ஃபெர்னாண்டஸ் மற்றும் கஷ்மீர் மகாஜனி நடித்துள்ள இந்தத் தொடர், உரி ராணுவ முகாமில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. ஆகஸ்ட் 15 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.

மேலும், ஆகஸ்ட் 14-ம் தேதி கங்கனா ரனாவத் நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த சர்வைவல் டிராமா, மும்பையின் காமா மற்றும் ஆல்பஸ் மருத்துவமனைகளில் பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் துணிச்சலான செயல்களை மையமாகக் கொண்டுள்ளது. இதில் கிரிஜா ஓக் கோட்போலே, ஸ்மிதா தாம்பே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
ஓடிடி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : தாலாட்டுக்காக போட்ட மெட்டு... குத்துப்பாடலாக மாறிய அதிசயம்! மணிரத்னம் படத்துக்காக இளையராஜா செய்த மேஜிக்
Recommended image2
Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!
Recommended image3
Yash Net Worth : 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய KGF யஷ்ஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
Jio OTT Plans: ஜியோ யூசர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.550-க்கு 15+ ஓடிடி ஆப்ஸ், அன்லிமிடெட் 5G!
Recommended image2
Jio Home: மாதம் ரூ.400 ரூபாய்க்கு வைஃபை, 1000+ டிவி சேனல்கள், ஓடிடி.. அசத்தும் ஜியோவின் புதிய ஹோம் பேக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved