- Home
- Cinema
- விராட் கோலி - அனுஷ்கா சர்மா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு... மகளின் முதல் போட்டோவுடன் வெளியான ஹேப்பி நியூஸ்!
விராட் கோலி - அனுஷ்கா சர்மா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு... மகளின் முதல் போட்டோவுடன் வெளியான ஹேப்பி நியூஸ்!
இன்று தங்களுடைய செல்ல மகளுக்கு பெயர் வைத்துள்ள விராட் - அனுஷ்கா ஜோடி, குடும்பமாக இருக்கும் க்யூட் போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் - பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பு, தயாரிப்பு என அனுஷ்கா சர்மா பிசியாக இருந்தார். அதேபோல் கோலியும் இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பை தாங்கி வந்தார். இந்த ஜோடியின் முதல் வாரிசை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கர்ப்பமாக இருந்த அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், எங்களுடைய பர்சனல் நேரத்திற்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் விராட் கோலி அறிவித்தார்.

இதையடுத்து சமீபத்தில் விராட் கோலியின் மகள் புகைப்படம் என்று ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி பதிவிட்ட அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அது விராட் கோலி குழந்தையின் புகைப்படம் கிடையாது என்றும் விகாஸ் கோலி விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து விராட் கோலி மகளின் முகத்தைக் காண ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று தங்களுடைய செல்ல மகளுக்கு பெயர் வைத்துள்ள விராட் - அனுஷ்கா ஜோடி, குடும்பமாக இருக்கும் க்யூட் போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளனர்.

மகளுக்கு வாமிகா (Vamika) என்று பெயர் வைத்துள்ளனர். அனுஷ்கா சர்மா குழந்தையை கையில் வைத்திருக்க, தன்னுடைய மகளை விராட் கோலி மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.