- Home
- Cinema
- அய்யோ இவரா... டி.ஆர்.பி.யை எகிறவைக்க பிரபல வில்லன் நடிகரை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ் டீம்
அய்யோ இவரா... டி.ஆர்.பி.யை எகிறவைக்க பிரபல வில்லன் நடிகரை போட்டியாளராக களமிறக்கும் பிக்பாஸ் டீம்
BiggBoss Tamil 6 : அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் அல்லாமல் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ளது. அதன்படி முதல் சீசனின் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகென் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஆகியோர் டைட்டில் வின்னர்களாகினர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ளது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் அல்லாமல் இது 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரமும் தொடர்ந்து லீக்கான வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... 300 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் வசூல்... இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்திய தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
இந்த முறை பொதுமக்களில் ஒருவரும் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். அதற்காக ஆடிஷன் வைத்து ஒருவரை தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு ஏராளமான புதுமைகளுடன் நடைபெற உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் உள்ளது. இதுவரை ஜிபி முத்து, பாடகி ராஜேஷ்வரி, சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி மற்றும் ஆயிஷா, நகைச்சுவை நடிகர்கள் மதுரை முத்து மற்றும் அமுதவாணன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது புது வரவாக இந்த லிஸ்டில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கலந்துகொண்டால் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. எகிறும் என்பதை கருத்தில் கொண்டு அவரை பிக்பாஸ் குழு களமிறக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கலந்துகொள்வது உண்மையா இல்லை இதுவும் வதந்தியா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
இதையும் படியுங்கள்... கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாடி... இளசுகள் மனசை கிளீன் போல்ட் ஆக்கிய ஜான்வி கபூர்... தீயாய் பரவும் வீடியோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.