கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாடி... இளசுகள் மனசை கிளீன் போல்ட் ஆக்கிய ஜான்வி கபூர்... தீயாய் பரவும் வீடியோ
Jhanvi Kapoor : நடிகை ஜான்வி கபூர், கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
மறைந்த தமிழ் நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் என்கிற மகள் உள்ளார். இவர் தனது தாயைப் போலவே சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் இதுவரை இந்தி படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் குட்லக் ஜெர்ரி என்கிற திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இது தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் நயன்தாரா நடித்த கேரக்டரில் தான் ஜான்வி கபூர் நடித்திருந்தார். குட்லக் ஜெர்ரி திரைப்படம் கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்ததாக ஜான்வி கபூர் நடிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஸ்லீவ்லெஸ் சுடியில் பார்வைகளை பற்றிக்கொள்ளும் ரம்யா பாண்டியன்
இப்படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க உள்ளார். இப்படத்தை ஷரன் ஷர்மா இயக்க உள்ளார். இதில் ஜான்விகபூர் உடன் ராஜ்குமார் ராவ், குமுத் மிஷ்ரா, ராஜேஷ் ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்திற்காக கடந்த ஆறு மாதமாக கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் ஜான்வி கபூர்.
அந்த வகையில் நடிகை ஜான்வி கபூர், கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதில் கவர்ச்சி உடையணிந்து அவர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதை பார்த்த ரசிகர்கள், கிரிக்கெட் விளையாடும்போது கூட இம்புட்டு கவர்ச்சியா என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம்... வியக்க வைக்கும் நடிகர் நெப்போலியனின் மறுபக்கம்