விஜயகாந்த் விஷயத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு; இயக்குனர் விக்ரமன் வருத்தம்!
'வானத்தைப் போல' படத்தில், விஜயகாந்த் விஷயத்தில் தான் தவறு செய்துவிட்டதாக இயக்குநர் விக்ரமன் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜயகாந்த் பற்றி பேசிய விக்ரமன்:
விஜயகாந்திற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களில், 'வானத்தைப் போல' படமும் ஒன்னு. இந்த படத்தில் விஜயகாந்த் அண்ணன் மற்றும் தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்திருந்த இந்த படத்தில் பிரபு தேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த், ஆனந்தராஜ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அண்ணன் தம்பிகள் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்:
அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அழகிய காதல் கதையும் இருக்கும். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்த இந்த படத்தின், கதைக்களம் என்றால்.. "ஒரு அண்ணன், தனது 3 தம்பிகளையும் வளர்ப்பதற்காக காதல் - வாழ்க்கை என மொத்தையும் தியாகம் செய்கிறார். அதே போல் தன்னுடைய தம்பிகளை கடைசி வரை ஒற்றுமையாக பார்த்துக் கொள்ள எப்படி கஷ்டப்படுகிறார் என்பதே. இந்த படத்தில் 2 விஜயகாந்த் தவிர... பிரபுதேவா, லிவிங்ஸ்டன், ஆகியோரும் நடித்திருந்தனர்.
விடாமுயற்சி ரிலீசான சில மணி நேரத்தில் இப்படியா ஆகணும்? படக்குழு தலையில் இடியை இறக்கிய விஷயம்!
200 நாட்களுக்கு மேல் வசூல் சாதனை செய்த வானத்தை போல திரைப்படம்:
திரையரங்கில் சுமார் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்த, இந்த படம் தற்போது வரை பல அண்ணன் தம்பிகள் விரும்பும் படமாக உள்ளது. இந்த படம் எப்படி ரசிக்கப்பட்டதோ அதே போல் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்தன. காதல் வெண்ணிலா, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, நதியே நயில் நதியே, ரோஜாப்பூ மாலையிலே, தாவணியே என்னை மயக்கிறியே, மைனாவே மைனாவே உள்ளிட்ட இப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களுமே ஹிட் பாடல்கள் தான்.
விக்ரமன் செய்த தவறு:
தமிழில் சிறந்த பொழுதுபொக்கு படத்திற்காக தேசிய விருதை பெற்ற இந்த படத்தில், விஜயகாந்த் விஷயத்தில் தான் ஒரு தவறு செய்துவிட்டேன் என்று அவரே கூறியிருக்கிறார். அதில், அண்ணன் விஜயகாந்துடன் ஒப்பிடும் போது, தம்பி விஜயகாந்திற்கு ஹீரோயிஷம் இல்ல. அதனால், தம்பி விஜயகாந்திற்கு கொஞ்சம் ஹீரோயிஷம் இருக்கிற மாதிரி வச்சிருக்கலாம். படத்திற்கு டப்பிங் பண்ணும் போது தான் எனக்கு இது தோணுச்சு. மறுபடியும் ரீ -ஷூட் பண்ணலாமா? என்று யோசிச்சோம். ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்ல. அதனால் வந்த வரைக்கும் படம் அப்படியே இருக்கடும் என்று விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்குமா? முதல் நாள் கணிப்பு!