கேஜிஎப் வடிவில் உருவாகும் சியான் விக்ரம் படம்...பா.ரஞ்சித் சொன்ன அதிரடி அப்டேட்!
இயக்குனர் பா ரஞ்சித் கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் நடிக்கும் தனது வரவிருக்கும் படம் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் (கேஜிஎஃப்) பின்னணியில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

vikram pa ranjith
சீயான் விக்ரமை வைத்து பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கவுள்ள செய்தி ஏற்கனவே தெரிந்த விஷயமே.மஹான் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணியில் விக்ரம் நடிப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள பா.ரஞ்சித் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
vikram pa ranjith
இந்த படம் குறித்து பேசிய பா.ரஞ்சித். இந்த திரைப்படம், 19 ஆம் நூற்றாண்டில் முதல்முறையாக KGFல் தங்கத்தை தோண்டி எடுக்கும் தொழிலாள வர்க்க சுரங்கத் தொழிலாளர்களைப் பற்றிய ஒரு காலகட்ட சமூக நாடகமாக இருக்கும் என் என கூறியதுடன்.. பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் படங்கள் வெளியாகும் வரை காத்திருக்க விரும்புவதாக இயக்குனர் கூறியுள்ளார் .
vikram 61
விக்ரமின் 61 வது படமான இப்படத்தின் ஸ்கிரிப்ட் தற்போது எழுதப்பட்டு வருகிறது, இதை ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப்படம் இது பிரசாந்த் நீலின் என்றும் இயக்குனர் தெரித்துள்ளார்.
kamal-pa.ranjith
இந்தப் படத்தைத் தவிர, ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, வெட்டுவம் கிராஸ்ஓவர் படம் , ஸ்பின்ஆஃப்கள் மற்றும் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் மற்றும் கமலுடன் புதிய படம் உள்ளிட்டவற்றை கைவசம் வைத்துள்ளார் பா.ரஞ்சித்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.