பட்டையை கிளப்பிய விக்ரம் வியாபாரம்...முந்தைய சாதனையை முறியடித்த கமல்
விக்ரம் படத்தின் வியாபாரம் குறித்து தகவல் கசிந்துள்ளது. ரிலீஸுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கு விலை போனதாக கூறப்படுகிறது.

vikram movie
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை, கார்த்தியின் மாஸ்டர் பாடத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். இதில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கிரீஷ் கங்காதரன் மேற்கொண்டுள்ளார்.
vikram movie
அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. பட ப்ரோமோஷனுக்காக தென்னக ரயில்களில் விக்ரம் பட போஸ்டரை வரைந்து விளம்பரப்படுத்தபட்டது.. வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லாஞ்ச் சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
vikram movie
1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இதில் கமல் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளாராம். அதோடு முதல் பாகத்தின் சில காட்சிகள் இடம்பெறுள்ள இதில் காமியோ ரோலில் வருவதாக சொல்லப்படும் சூர்யா இறுதி காட்சியில் கமலின் மகனாக வரவுள்ளாராம்.
vikram movie
விக்ரம் மூன்றாம் பாகத்தில் கதையும் ரெடியாக உள்ளதாக கூறப்படும் விக்ரம் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி விக்ரம் படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இதுவரை வெளிவந்த வந்த கமலின் அனைத்து திரைப்படங்களின் ரிலீஸ் முந்தைய வியாபாரங்களை விட அதிகம் என சொல்லப்படுகிறது.