- Home
- Cinema
- பிக்பாஸ் 9 போட்டியில் களமிறங்கும் தேசிய விருது பிரபலம் முதல் வாரிசு நடிகர் வரை! கன்ஃபாம் லிஸ்ட்!
பிக்பாஸ் 9 போட்டியில் களமிறங்கும் தேசிய விருது பிரபலம் முதல் வாரிசு நடிகர் வரை! கன்ஃபாம் லிஸ்ட்!
விஜய் டிவி தொலைக்காட்சியில், அக்டோபர் 5-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியில், களமிறங்கும் உறுதி செய்யப்பட்ட சில போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:
ஹாலிவுட்டில் துவங்காட்ட 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் இருந்து தோன்றியது தான் பிக்பாஸ். ஹிந்தியில் இதுவரை சுமார் 15 சீசன்களை கடந்துவிட்ட பிக்பாஸ், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் துவங்கப்பட்டது. குறிப்பாக தமிழில் 2017-ஆம் ஆண்டு, விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து துவங்கிவைத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் தான்.
முதல் சீசனே ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், அதனை மிகவும் சாமர்த்தியமாக கொண்டு சென்றார் கமல். இவர் தொகுத்து வழங்குவதையும், அவர் போட்டியாளர்கள் மனசு நோகாமல் கேட்கும் கேள்விகளை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
கமல்ஹாசன் விலகல்:
உலகநாயகன் கமல்ஹாசன் வெற்றிகரமாக 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த ஆண்டு AI தொழில்நுட்பம் பற்றி படிப்பதற்காக அமெரிக்கா சென்றதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார்கள் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்... விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறினார்.
கார்த்திக்கு அதிர்ச்சி கொடுத்த காளியம்மா.! பரமேஸ்வரிக்கு தெரியவந்த உண்மை - கார்த்திகை தீபம் அப்டேட்!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9:
பிக்பாஸ் சீசன் 8, கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில்... பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்களும் தொடர்ந்து ஒளிபரப்பாக துவங்கி விட்டது. அதே போல் போட்டியாளர்களும் முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் முதல் தக் லைஃப் வரை.... ஓடிடியில் அதிக ரேட்டுக்கு விற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள்
உறுதியான பிக்பாஸ் போட்டியாளர்கள்:
அந்த வகையில் இந்த முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் முதல் வாரிசு பிரபலங்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி, சீரியல் நடிகர் புவியரசு, சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார், பாரதி கண்ணம்மா பரீனா ஆசாத், யூடியூபர் அஹமத் மீரன் ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாக உள்ளதாம்.
Meena And Rajinikanth Romance Movies : ரஜினிக்கு மகளாக நடித்து பின் காதலியாக நடித்த மீனா!