கார்த்திகை தீபம் 2 சீரியலில், காளியம்மா எப்படியும் சிக்கிவிடுவார் என கார்த்திக் எதிர்பார்த்த நிலையில், அவருக்கே அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்தேறுகிறது. அது என்ன என்பதை பார்ப்போம்.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை, வாரம் 6 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், காளியம்மா வீட்டில் தான் கையெழுத்து வாங்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்ற விஷயம் கார்த்திக்கு தெரிய வந்த நிலையில் இன்று கார்த்திக் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
15 நாட்களில் ரூ.12.50 கோடி நஷ்டம்- ஜாய் கிரிசில்டா புகாரால் சேதாரம்.. கதறும் மாதம்பட்டி ரங்கராஜ்
அதாவது, கையெழுத்து வாங்கிய இருவரையும் பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைக்க மயில்வாகனம், மற்றும் கார்த்திக் ஆகியோர் கிளப்பி செல்கின்றனர். ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அதிர்ச்சியாக, காளியம்மா நீ தான் போலி சாமியார் வேஷத்தில் வந்தாய் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று ஏளனமாக பேசி அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் இவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
மறுபக்கம் பூட்டப்பட்டு இருக்கும் கோவில் அருகே இருவருக்கு யாரோ சாப்பாடு கொண்டு போவதை கவனிக்கிறார் பரமேஸ்வரி பாட்டி. மேலும் கையெழுத்து வாங்கிய இருவரும் இங்கு தான் பதுங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. உடனே பாட்டி கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார், கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
