தமன்னா உடன் கல்யாணம் எப்போ?... நடிகர் விஜய் வர்மா அளித்த கோக்குமாக்கு பதில்
விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவிடம் தமன்னா உடன் திருமணம் எப்போ என்கிற கேள்வி சூசகமாக கேட்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் சரிவர மார்க்கெட் இல்லாததால் அப்படியே பாலிவுட் பக்கம் ஒதுங்கிவிட்டார். தற்போது தமன்னா கைவசம் தமிழில் ஜெயிலர் படம் மட்டுமே உள்ளது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தமன்னா. இதன்மூலம் ரஜினியுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
தற்போது நடிகை தமன்னாவிற்கு 33 வயது ஆகிறது. இருப்பினும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் தமன்னா, சமீப காலமாக காதல் சர்ச்சைகளில் அதிகளவில் சிக்கி வருகிறார். குறிப்பாக பாலிவுட் நடிகரான விஜய் வர்மா உடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் தமன்னா, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி இவர்களிடையேயான காதல் சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது.
இதையும் படியுங்கள்... நண்பர் ரஜினிக்காக களமிறங்கும் கமல்... லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் இணையும் படத்தில் திடீர் டுவிஸ்ட்
சமீபத்தில் கூட இருவரும் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஜோடியாக டின்னர் டேட்டிங் சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. இப்படி தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தாலும், காதல் குறித்து எந்தவித பதிலும் அளிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் வர்மாவிடம், ஏதாவது குட் நியூஸ் இருக்கிறதா என திருமணம் பற்றி சூசகமாக கேள்வி கேட்க, அதற்கு சீக்கிரமே நல்ல திரைப்படத்தை கொடுக்க முயற்சிக்கிறேன் என சொல்லிவிட்டு நேக்காக எஸ்கேப் ஆகிவிட்டார் விஜய் வர்மா. அதற்கு இது பதில் இல்லையே என்பது போல் செய்தியாளர்கள் குழம்பிப் போயினர்.
இதையும் படியுங்கள்... காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை வெளியிட்டு தன் ஸ்டைலில் வாழ்த்திய ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ