காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை வெளியிட்டு தன் ஸ்டைலில் வாழ்த்திய ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ
யோகிபாபு நடித்துள்ள காவி ஆவி நடுவுல தேவி என்கிற திகில் படத்தின் டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார்.
எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள "காவி ஆவி நடுவுல தேவி" திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், " இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்" என்று பாராட்டி படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அருகில் வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி எடிட்டர் மார்ட்டின் ஆகியோர் உள்ளனர்.
காவி ஆவி நடுவுல தேவி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்துள்ளார். திகில் கலந்து காமெடி திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லர் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியது படக்குழுவுக்கு உற்சாகமளித்துள்ளது.