என்னது வாரிசு போஸ்டர் காப்பியா?..பிரபல நிறுவனம் தந்த விளக்கம் !
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் துல்கர்சல்மான்நடித்த ஓட்டோ நிறுவனத்தின் விளம்பர போஸ்டர் போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Varisu
நடிகர் விஜய் ஜூன் 22 அன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு, இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார், அதற்கு தற்காலிகமாக 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டது. நடிகரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் இருந்து விஜய்யின் தோற்றத்தின் மூன்று வெவ்வேறு போஸ்டர்களை வெளியிட்டனர். 2023 பொங்கல் அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு... விஷ்ணு விஷாலின் தந்தையை தப்பிக்க விட மாட்டேன்..கொந்தளிக்கும் சூரி !
varisu
படக்குழுவினர் வெளியிட்ட மூன்று போஸ்டர்களை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் போஸ்டரில் விஜய் ஒரு வெள்ளை கட்டிட பின்னணியுடன் சூப்பர் ஃபார்மல் கிரே உடையில் அணிந்திருந்தார், இரண்டாவது போஸ்டரில் நடிகர் சில குழந்தைகளுடன் திரையைப் பகிர்ந்து கொண்டார். மூன்றாவது போஸ்டரில் விஜய் பைக்கில் வந்திருந்தார். இந்த போஸ்டரை ம நடிகர் பயன்படுத்திய பைக் ஒரு சாகச விளையாட்டு பைக் என்று ரசிகர்கள் கண்டறிந்தனர்.
VARISU
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது மேலும் விஜய் ரசிகர்களின் பைக் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் பயன்படுத்திய பைக் எக்ஸ்ஷோரூம் விலையில் ரூ.2,20,000 என கூறப்படுகிறது. படத்தில் விஜய் இந்த பைக்கைப் பயன்படுத்தும் இரண்டு காட்சிகள் இருப்பதாகவும், இந்த பைக் படத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பதாகவும், தங்கள் ஹீரோ பைக் ஸ்டண்ட் செய்வதைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு... மாறி மாறி கிளிக் செய்து கொண்ட நயன் - விக்கி தம்பதி..வைரலாகும் க்யூட் போட்டோஸ்!
varisu
இந்நிலையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போட்டோ ஓட்டோ நிறுவனத்தின் விளம்பர போஸ்டர் போல இருப்பதாக கூறி நெட்டிசன்கள் கமெண்டுகளை செய்து வந்தனர். இதற்கு ஓட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த போட்டோக்கும் ஓட்டோவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது பொழுதுபோக்கிற்காக மீம் கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்த 'மெல்ல திறந்து கதவு' உருவான கதை !
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.