- Home
- Cinema
- அட்ராசக்க... பாடலை தொடர்ந்து நடிப்பில் இறங்கிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..! ஹீரோயினாக நடிக்கிறாரா?
அட்ராசக்க... பாடலை தொடர்ந்து நடிப்பில் இறங்கிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..! ஹீரோயினாக நடிக்கிறாரா?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ராஜலட்சுமி தற்போது, நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார் இது குறித்த தகவல் தற்போது வெளியாக, பலரும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து தயாரிக்கும் படம் "லைசென்ஸ்". இந்த படத்தின் தான் சூப்பர் சிங்கர் புகழும், பிரபல பின்னணி பாடகியுமான ராஜலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா இன்று நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தந்தை - மகள் பாசப் பின்னணியுடன், பெண்களின் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கும் பரபரப்பான கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கணபதி பாலமுருகன். இவர் ஏற்கனவே பிரபல நடிகர் காமெடி கிங் கவுண்டமணி நடித்து வெளியான, "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது"என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ லட்சுமியை தவிர இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அறிமுக நடிகரான விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் விதமாக எடுக்கப்படும் இந்த படத்தில் பாடல்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும், இதில் சில பாடல்களை ராஜ லட்சுமி பாட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.