- Home
- Cinema
- கணவரின் ஆசை; புதிய கார் வாங்கி கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி! என்ன கார் தெரியுமா?
கணவரின் ஆசை; புதிய கார் வாங்கி கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி! என்ன கார் தெரியுமா?
பிரபல சீரியல் நடிகை வைஷாலி, தன்னுடைய கணவருடன் சென்று புதிய கார் வாங்கிய தகவலை உச்சாகத்துடன் அறிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கதகளி மூலமாக அறிமுகம்:
சென்னையை சேர்ந்த வைஷாலி, சீரியலில் நடிக்க துவங்குவதற்கு முன், திரைப்படங்கள் மூலமாக தான் நடிகையாக அறிமுகமானார். நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'கதகளி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தை தொடர்ந்து, காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ, சீமராஜா போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்தார்.
Vaishali Thaniga Serial:
வைஷாலி நடித்த சீரியல்கள்:
திரைப்பட வாய்ப்புகள் போதிய அளவு கிடைக்காத காரணத்தாலும், எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்காததாலும், அதிரடியாக சீரியல் வாய்ப்புகளை தேட துவங்கினார். 'ராஜா ராணி' சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், 'பாண்டியன் ஸ்டோர்' முதல் பாகத்தில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், பின்னர் அதிரடியாக சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.
Vaishali Acting Serials:
தற்போது நடித்து வரும் சீரியல்கள்:
முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்ட வைஷாலி, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி, மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். தன்னை வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அதனை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள வைஷாலி, புதிய கார் வாங்கிய தகவலை அறிவித்துள்ளார்.
Vaishali Buy a New Car:
கணவர் ஆசைப்பட்ட காரை பரிசளித்த வைஷாலி:
அதாவது தன்னுடைய கணவர் ஆசைப்பட்ட மகேந்திராவின் புதிய பிராண்ட் கார் BE 6E காரை தான் வாங்கி கொடுத்துள்ளார். இந்த கார் சுமார் 28 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவையும் வைஷாலி வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
Vaishali husband:
வைஷாலியின் திருமணம்:
வைஷாலி தன்னுடைய காதலரை சத்ய தேவ் என்பவரை, 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.