விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவருவர்' ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! குவியும் வாழ்த்து..!
கொரோனா லாக்டவுன் முடிந்த பின், அடுத்தடுத்து பல பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
அந்தவகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் ஹீரோயினாக நடித்தவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான மிர்ச்சி செந்தில், தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் தொடரின் நடித்து வருகிறார்.
லாக் டவுனுக்கு பிறகு இந்த சீரியல் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது.
அதற்கு முன் இரட்டை வேடத்தில் நடித்த, மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி ஆகிய இருவர் நடித்து வந்தனர்.
இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் திடீர் என சில மாற்றங்கள் கொண்டு வந்து, தற்போது புதிய கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த ராஷ்மிக்கு நவம்பர் 27 ஆம் தேதி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ள இவரது, நிச்சயதார்த்த புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.