விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர், தொகுப்பாளினி பிரியங்கா. இவர் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர், தொகுப்பாளினி பிரியங்கா. இவர் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம். விஜே பிரியங்கா, டிடி, ஜாக்குலின் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போதைய நிலவரப்படி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது பிரியங்கா புட் பாயிசன் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ணனுமதிக்க பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 12 ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு, உரிய சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். இதுகுறித்த வீடியோவையும் வெளியிட ரசிகர்கள் பலர் தொடர்ந்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் பிரியங்கா தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.