- Home
- Cinema
- Pandian Stores: விதியை நம்பும் கதிர் மற்றும் ராஜீ – தப்பிச் சென்ற குமரவேலுவிற்கு என்ன ஆச்சு?
Pandian Stores: விதியை நம்பும் கதிர் மற்றும் ராஜீ – தப்பிச் சென்ற குமரவேலுவிற்கு என்ன ஆச்சு?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ராஜீயின் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 469ஆவது எபிசோடில் கதிர் மற்றும் ராஜீ இருவரும் விதியைப் பற்றி பேசுகிறார்கள். நான் டான்ஸ் ஆடுவதை பார்க்க நீ வருவியா என்று தெரியாது. ஆனால், முயற்சி செய்கிறேன் என்று கூறினாய். விதியே உன்னை இங்கே கூட்டி வந்து நிறுத்திவிட்டது என்று கதிர் மற்றும் ராஜீ இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.
டான்ஸ் போட்டிக்கு ராஜீ பயிற்சி செய்கிறார்:
அடுத்த காட்சியாக டான்ஸ் போட்டிக்கு ராஜீ பயிற்சி செய்கிறார். அப்போது கோமதி வந்து கதிரை பற்றி கேட்க, அவரும் செந்தில் மாமாவும் ஷாப்பிங் போயிருக்காங்க. டிரெஸ் எடுக்காமல் வந்து விட்டார்கள். மேலும், எனக்கும் டான்ஸ் டிரெஸ் எடுக்க போயிருக்காங்க என்று கூறுகிறார். அந்த நேரம் பார்த்து மீனா வந்து அழ ஆரம்பிக்கிறார். என் மீது கோபம் இல்லையா அப்படி இப்படி என்று பேசுகிறார். என்னுடைய அக்கா நீங்கள். உங்கள் மீது எனக்கு கோபம் இல்லை என்று ராஜீ கூற அடுத்த சீனாக டான்ஸ் நிகழ்ச்சி காட்டப்படுகிறது.
3ஆவது போட்டியின் முதல் சுற்றில் ராஜீ :
இதில், 3ஆவது போட்டியின் முதல் சுற்றில் ராஜீ எல்லோரும் ரசிக்கும்படியாக டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் இடம் பெற்ற 4 பேரில் ராஜீயும் ஒருவராக கலந்து கொள்கிறார். இதில், தேர்வு செய்யப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார். 2ஆவது சுற்று போட்டியில் 2 ஆண்கள் டான்ஸ் ஆடி முடித்த நிலையில் 3ஆவதாக ராஜீயும் தயாராக இருக்கிறார்.
தப்பிச்சென்ற குமரவேல் எங்கு சென்றார்
அப்போது உள்ளூர்வாசிகள் வந்து ராஜீயிடம் கலாட்டா செய்யவே, கதிர் மற்றும் செந்தில் இருவரும் சண்டைக்கு செல்கிறார்கள். இதையடுத்து 2ஆவது சுற்று போட்டியில் ராஜீ டான்ஸ் ஆடுவாரா என்பது குறித்து நாளைய எபிசோடில் தெரியவரும். இதற்கிடையில் தப்பிச்சென்ற குமரவேல் எங்கு சென்றார், என்ன ஆனார்? என்பது பற்றிய விவரங்கள் இல்லை. எனினும் அவர் நேரடியாக வீட்டிற்கு சென்றிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தன்னை மீனா தாக்கியதாக தனது அப்பா சக்திவேலுவிடம் நடந்தவற்றை சொல்லி மீனாவின் அரசு வேலைக்கு ஆப்பு வைக்க பிளான் பண்ணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.