MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...மாஸாக கொண்டாடிய சீரியல் டீம்

1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...மாஸாக கொண்டாடிய சீரியல் டீம்

சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 14 2022, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pandian stores

pandian stores

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சீரியலில் சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் கண்ணன் என நான்கு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள்  சிறுவர்களாகராக இருக்கையில் சத்தியமூர்த்தி திருமணம் செய்து கொண்ட தனம் எவ்வாறு தனது குடும்பத்தை வழி நடத்துகிறார் என்பதே இதன் மையக்கருத்தாக இருந்தது.

24
pandian stores

pandian stores

குன்றக்குடியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸில் மூத்த மகனான சத்தியமூர்த்தி மற்றும் தனம் இருவரும் ஜீவா, கதிர், கண்ணன் என மூன்று சகோதரர்களையும் வளர்கின்றனர். அவர்கள் வளர்ந்ததும் மீனா, முல்லை மற்றும் ஐஸ்வர்யா என மூன்று மருமகள் வீட்டிற்கு புதிதாக பிரவேசிக்க இவர்கள் அனைவரையும் அரவணைத்து தனம் எவ்வாறு கூட்டுக் குடும்பமாகவே இதனை நடத்தி வருகிறார் என்பதை  ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்து வந்தது இந்த சீரியல். அதோடு மறைந்த வி ஜே சித்ராவுக்கு அதிக பிரபலம் கொடுத்ததும் இந்த சீரியல் தான்.

மேலும் செய்திகளுக்கு... உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் 4 இயக்குனர்கள்..வெளியான சுவாரஸ்ய தகவல்

34
pandian stores

pandian stores

வீனஸ் இன்ஃபோடைன்மெண்ட் தயாரித்த இந்த சீரியலை சிவசேகர் 550 எபிசோடுகளையும் டேவிட்சர்லி 551 எபிசோடுகளில் இருந்து தற்போது வரையும் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின்,  வெங்கட் ரங்கநாதன், ஹேமா, ராஜ்குமார் குமரன், தங்கராஜன், காவிரி அறிவுமணி, சரவணன் விக்ரம், சாய் காயத்ரி என பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?

44
pandian stores

pandian stores

தற்போது கூட்டுக்குடும்பத்திலிருந்து கதிர் மற்றும் முல்லை இருவரும் தனி குடுத்தனம் சென்று விடுகின்றனர். அதோடு அவர்கள் தனியாக ஹோட்டல் நடத்துகின்றனர். இந்த பிரிவை சமாளிப்பதற்காக மூர்த்தியுடன் இணைந்து கடையை கவனித்து வருகிறார் தனம்.  தற்போது இந்த சீரியல் 1000 மாவது எபிசோடை கடந்துள்ளது. இதனை ஒட்டி சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved