Kushboo Serial: குஷ்பு ஹீரோயினாக நடிக்கும் சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம்!
நடிகை குஷ்பு சீரியலில் கதாநாயகையாக நடிக்க உள்ள 'சரோஜினி' தொடர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் நாட்டு மருகமான குஷ்பூ, தமிழ் சினிமாவுக்கு முன்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். சில ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு 14 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்த குஷ்புவுக்கு தர்மத்தின் தலைவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதை தொடர்ந்து 'வருஷம் 16' படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட குஷ்பு
இந்த படத்தின் வெற்றி குஷ்புவை கமல்ஹாசனுக்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்த்தியது. 80-பது மற்றும் 90-களில் அடுத்தடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், போன்ற நடிகர்களுக்கு ஜோடி போட்டார். குறிப்பாக ரஜினிகாந்துக்கு ஜோடியாக இவர் நடித்த அத்தனை படங்களும் திரையரங்கை தெறிக்கவிட்டது. 8 10 வருடங்கள் கிட்டத்தட்ட ஹீரோயினாக நடித்த குஷ்பு-க்கு வயசு கூடியதும் வாய்ப்புகள் குறைய துவங்கியது.
பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் - உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!
இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம்:
பின்னர், அதிரடியாக இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த குஷ்பூ, பல படங்களில் தன்னை ஒரு திறமையான குணச்சித்திர நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குஷ்பு
நடிப்பை தாண்டி, கணவரின் படங்களை சிலவற்றை தயாரித்து வரும் குஷ்பு, தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலில் நடுவராக மாறினார். அதே போல் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் குஷ்பு. குறிப்பாக இவர் நடித்த சின்ன சின்ன ஆசை, அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நம்ப குடும்பம், ருத்ரா, பார்த்த ஞாபகம், லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலம்.
குஷ்புவுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்
கடந்த சில வருடங்களாக சீரியலில் கேமியோ ரோலில் நடித்தாலும்... முழு நேர சீரியல் நடிகையாக மாறாமல் இருந்த குஷ்பு தற்போது நடிக்கும் புதிய சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் டிடி பொதிகையில் உருவாகி வரும் சரோஜினி என்கிற சீரியலில் நடிக்க உள்ளார். இந்த சீரியலின் படப்பிடிப்பு இரக்கனவே பூஜையோடு தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த சீரியலில், விஜய் டிவி பிரபலமும் இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சின்னமருமகள் சீரியலில் நடித்து வரும் பானு தான் குஷ்பூவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.