“குக் வித் கோமாளி” நிகழ்ச்சிக்கு என்ன ஆச்சு?.... தேசிய அளவில் ட்ரெண்டாகும் #CookWithComali2 ஹேஷ்டேக்...!
குக் வித் கோமாளி சீசன் 2விற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தின் வரவேற்பை நிரூபிக்கும் வகையில் #CookWithComali2 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது.

சமையல் நிகழ்ச்சியை கூட இப்படி கலகலப்பான காமெடி கலந்து கொடுக்க முடியும் என்பதை விஜய் தொலைக்காட்சி நிரூபித்துள்ளது. குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, கொண்ட தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்த ஷோவை டி.வியில் பார்ப்பவர்களை விட டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் விஜபி-யில் பணம் கட்டி முதலில் பார்ப்பவர்கள் தான் அதிகம்.
அப்படி இன்றைய எபிசோட்டை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் அப்லோடு செய்ய தாமதம் ஆனதால் நிகழ்ச்சியை சரியான நேரத்திற்கு பார்க்க முடியாமல் தவித்துப் போன ரசிகர்கள் ட்விட்டரில் குமுற ஆரம்பித்துவிட்டனர்.
குக் வித் கோமாளி சீசன் 2விற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தின் வரவேற்பை நிரூபிக்கும் வகையில் #CookWithComali2 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.