விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு - 'ஜன நாயகன்' படக்குழுவின் அதிரடி மூவ்
Jana Nayagan Release Date: ஜன நாயகன் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay Jana Nayagan Movie
நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்பாக நடித்து வரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஜனநாயகன் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேதியை இறுதி செய்வதற்காக, தயாரிப்பாளர் தரப்பு முக்கிய விநியோகஸ்தர்களுடன் ஒரு பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
Jana Nayagan Leak Issue
ஏப்ரல் மாத இறுதியில் கோடை விடுமுறை தொடங்குவதால், அந்தச் சமயத்தில் படத்தை வெளியிடுவது வசூல் ரீதியாகப் பெரும் லாபத்தைத் தரும் எனத் தயாரிப்பு தரப்பு கணக்கு போடுகிறது. இந்தக் கூட்டத்தில் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை, அதிகாலைக் காட்சிகள் மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் விளம்பரப் பணிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்தும் விவாதிக்கப்படலாம்.
Jana Nayagan Release Date
விஜய்யின் அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் வெற்றி அவரது பிம்பத்திற்கு மிக முக்கியமானது என்பதால் விநியோகஸ்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஏற்கனவே விஜய்யின் கடைசி படங்கள் குறித்த பேச்சுகள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், 'ஜனநாயகன்' ஏப்ரல் 24-ல் வெளியாக வாய்ப்புள்ளதாக வந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் சட்டவிரோதமாக வெளியானாலும் விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை திரையரங்கிற்கு சென்று தான் பாப்போம் என்று கடும் கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.