கடும் போட்டிக்கு நடுவே.. தளபதியின் 'வாரிசு' பட ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்..!
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'வாரிசு' படத்தின், டிஜிட்டல் உரிமையை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும், 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அவ்வப்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே... கடும் போட்டிகளுக்கு இடையே, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரு நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஜோடியாக, அவரது தீவிர ரசிகையாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், குஷ்பூ, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: மெல்லிய இடையை காட்டி மெர்சலாக்கும் மாளவிகா மோகனன்..! ஜிகு ஜிகு உடையில் ஜிவ்வுனு ஈர்க்கும் போட்டோஸ்..!
இடைவிடாது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் செட் அமைத்து, மீதம் உள்ள காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகிறார்கள். விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு தயாராகி வருகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிபிடித்தக்கது.
varisu
இது ஒருபுறம் இருக்க, விஜய் நடித்து வரும்... 'வாரிசு' படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றுவதில், மிகப்பெரிய போட்டி நிலவி வந்த நிலையில், இதனை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: அசைப்புல நயன்தாரா போலவே இருக்கும் வாணி போஜன்..! விதவிதமான உடையில் இளம் நெஞ்சங்களை கொள்ளையடித்த கியூட் போஸ்!