Beast Teaser update : பீஸ்ட் டீசரில் அந்த ஒரு விஷயம் மட்டும் இருக்காதாம்... டுவிஸ்ட் வைக்கும் நெல்சன்
Beast Teaser : பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ரா ஏஜண்டாக நடித்துள்ளார். மேலும் இப்படம் தங்கக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் ஏப்ரல் 13-ல் ரிலீஸ்
தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், படக்குழு எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்ததைப் பார்த்து கோபமடைந்த ரசிகர்கள், படக்குழுவினருக்கு சமூக வலைதளம் வாயிலாக அழுத்தம் கொடுத்து வந்தனர்.
பீஸ்ட்டின் அடுத்த அப்டேட்
இதன் பலனாக பீஸ்ட் அப்டேட் குறித்து நேற்று ஒரு டுவிட் போட்டார் நெல்சன். அதில் நாளை என அவர் குறிப்பிட்டிருந்தார். இதைவைத்து பார்க்கும் போது பீஸ்ட் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இன்று வெளியிடப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாம்.
நெல்சன் வைக்கும் டுவிஸ்ட்
பீஸ்ட் டீசர் குறித்து மற்றுமொரு சுவாரஸ்ய தகவலும் கசிந்துள்ளது. அதன்படி பீஸ்ட் டீசரில் நடிகர் விஜய் செம்ம மாஸாக கெத்தாக இருப்பார் என்றும், ஆனால் அதில் அவர் வசனம் பேசும்படியான காட்சிகள் எதுவும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த டீசர் முழுவதும் பின்னணி இசையுடன் தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
5 மொழிகளில் ரிலீஸ்
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ரா ஏஜண்டாக நடித்துள்ளார். மேலும் இப்படம் தங்கக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் இந்தியில் மட்டும் ரா என்ற பெயரிலும், மற்ற 4 மொழிகளிலும் பீஸ்ட் என்ற பெயரிலும் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... AK 61 Update : ஏ.கே.61 படத்துக்காக அஜித் எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்.... ‘வலிமை’ நாயகனுக்கு இது செட் ஆகுமா?