MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Beast movie : அதிரடியாக மாற்றப்படும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி... கே.ஜி.எப் உடன் மோதலை தவிர்க்கிறாரா விஜய்?

Beast movie : அதிரடியாக மாற்றப்படும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி... கே.ஜி.எப் உடன் மோதலை தவிர்க்கிறாரா விஜய்?

Beast movie : பீஸ்ட் படத்தை முதலில் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அன்றைய தினம் யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படம் வெளியாவதால், பீஸ்ட் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Mar 15 2022, 07:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பீஸ்ட் மோடில் விஜய்

விஜய் - நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

24

ஏப்ரல் மாதம் ரிலீஸ்

நண்பன் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

34

அடுத்தடுத்து அப்டேட் ரெடி

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருகிற ஏப்ரல் 2-ந் தேதி இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

44

பீஸ்ட் ரிலீஸ் தேதி மாற்றம்

பீஸ்ட் படத்தை முதலில் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அன்றைய தினம் யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படம் வெளியாவதால், பீஸ்ட் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 13-ந் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

முதல் நாள் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காக பீஸ்ட் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... Actor Vijay :முதல்வர் சொன்னத ஃபாலோ பண்ணுங்க நண்பா.. விஜய் ரசிகர்களுக்கு பறந்த உத்தரவு- ஸ்டாலின் ரூட்டில் தளபதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பிரியும் விஜயா - அண்ணாமலை; வீடு ஜப்தி செய்யப்படும் முன் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்
Recommended image2
RB Choudary: பூவே உனக்காக பட தயாரிப்பாளரும், ஜீவாவின் தந்தையுமான ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் உயிரிழப்பு!
Recommended image3
29 முதல் LIK வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved