நெகடிவ் விமர்சனங்களால் 2-ம் நாளில் 50 சதவீதத்துக்கும் மேல் சரிந்த வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பீஸ்ட்
Beast Day 2 collection : நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை காரணமாக பீஸ்ட் படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளது. இப்படம் இரண்டாம் நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 20.95 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரிலீசுக்கு முன்பே பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பான் இந்தியா படமாக கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியான இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்பார்த்த அளவு படம் இல்லாததால் ரசிகர்களும் மிகுந்து வருத்தம் அடைந்துள்ளனர். முதல் நாளில் 49.3 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை காரணமாக பீஸ்ட் படத்தின் வசூல் கடுமையாக பாதித்துள்ளது. இப்படம் இரண்டாம் நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 20.95 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது முதல் நாளோடு ஒப்பிடுகையில் 57 சதவீதம் குறைவாகும். குறிப்பாக இப்படம் இந்தியில் இரண்டு நாட்களில் 1 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லையாம். முதல் நாளில் 60 லட்சம் வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் 20 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம்.
தமிழைப் பதிப்பை பொருத்தவரை முதல் நாளில் 42.45 கோடி ரூபாய் வசூலித்திருந்த பீஸ்ட் படம் இரண்டாம் நாளில் 19.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஈட்டி உள்ளது. தெலுங்கில் முதல் நாளில் 6.25 கோடி ரூபாய் வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் 1.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். இதுவரை பீஸ்ட் படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ.115 கோடி வசூலித்துள்ளது.
இப்படம் நஷ்டம் இன்றி தப்பிக்க ரூ.250 கோடி வசூலை தாண்ட வேண்டுமாம். இனி வரும் நாட்களிலும் இதன் வசூல் இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதனால் வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Pooja hegde :தொடர் தோல்விக்கு பின் ரூட்டை மாற்றிய பீஸ்ட் நாயகி... அசுரனுடன் ஐட்டம் டான்ஸ் ஆடும் பூஜா ஹெக்டே